Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘ஆன்மீகப் பேச்சாளர் அபினவ் அரோராவின் பேச்சை தாங்கமுடியாமல் மாடு அவரை தாக்கியது’ என வைரலாகும் பதிவு உண்மையா?

07:57 PM Dec 25, 2024 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by BOOM

Advertisement

ஆன்மீகப் பேச்சாளர் அபினவ் அரோரா வீடியோ பதிவிட்டபோது, பின்னால் இருந்து மாடு அவரை தாக்கியதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

ஆன்மீகப் பேச்சாளரான 10 வயது சிறுவன் அபினவ் அரோராவின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், 'உங்கள் சுப காரியங்களில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அல்லது நடக்காமல் போனால்’ என கூறும்போது பின்னாலிருந்து மாடு ஒன்று அவரைத் தாக்குகிறது.

வைரல் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகவும், AIஆல் உருவாக்கப்பட்டதாகவும் BOOM கண்டறிந்துள்ளது. அசல் வீடியோவில், அபினவ் அரோரா தனது முழு பிரசங்கத்தையும் வழங்குவதை காணலாம். அவருக்குப் பின்னால் அமர்ந்திருக்கும் பசுக்கள் அவரைத் தாக்கவில்லை.

ஒரு ட்விட்டர் (எக்ஸ்) பயனர் இந்த வீடியோவை பகிர்ந்து, 'மாட்டால் கூட இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை' என பதிவிட்டுள்ளார்.

(காப்பக இணைப்பு)

இந்த வீடியோ பேஸ்புக்கிலும் வைரலானது. (காப்பக இணைப்பு)

உண்மை சரிபார்ப்பு:

வீடியோ குறித்து சரிபார்க்க, முதலில் அபினவ் அரோராவின் சமூக ஊடக கணக்கு சரிபார்க்கப்பட்டது. அப்போது, அபினவ் அரோராவின் இன்ஸ்டாகிராம் கணக்கில் 8 நவம்பர் 2024 அன்று பகிரப்பட்ட வீடியோ கிடைத்தது.

இந்த வீடியோவில், அபினவ் அரோரா ஒரு மாட்டு தொழுவத்தில் அமர்ந்து தனது முழு கதையையும் கூறுகிறார். இந்த நேரத்தில் அவர் மீது தாக்குதல் எதுவும் நடக்கவில்லை.

அபினவ் அரோராவின் ஒரிஜினல் வீடியோவைப் பார்த்தால், வைரலான வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. வைரல் வீடியோவின் நிறம் மிகவும் நிறைவுற்றது மற்றும் வீடியோவின் ஒரு பகுதி அதிக பிக்சலேட்டாக உள்ளது.

இந்த வீடியோவை AI டிடெக்டர் டூல் ட்ரூ மீடியாவில் சரிபார்த்தபோது, வீடியோ AIஆல் உருவாக்கப்பட்டதற்கு 90% வாய்ப்பு உள்ளதாக தெரியவந்தது.

Note : This story was originally published by ‘BOOM’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Abhinav AroraAttackCowFact CheckNews7TamilReligious InfluencerShakti Collective 2024Team Shaktiviral video
Advertisement
Next Article