‘இந்தியாவில் ஒரு மசூதி தீவைக்கப்பட்டுள்ளது’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This news Fact Checked by ‘AajTak’
இந்தியாவில் ஒரு மசூதி தீவைக்கப்பட்டுள்ளது என இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
சமீபத்தில், உத்திரபிரதேசம் சம்பாலில் உள்ள ஷாஹி ஜமா மசூதியின் சர்வேயால் சூடுபிடித்துள்ளது. கடந்த மாதம் மசூதி கணக்கெடுப்பின் போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், மசூதி ஒன்றில் தீப்பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மூன்று வழி சந்திப்பில் அமைந்துள்ள ஒரு வெள்ளை மசூதியை வீடியோ காட்டுகிறது. மசூதியின் மினாரட் தீப்பிடித்து எரிகிறது. மசூதிக்கு வெளியே சாலையில் பலர் நிற்பதையும் காணலாம். இந்த மசூதி இந்தியாவில் உள்ளதாகவும், தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளதாகவும் கூறி வீடியோ பகிரப்பட்டு வருகிறது.
உதாரணமாக, ஒரு பேஸ்புக் பயனர் வைரல் வீடியோவை பகிர்ந்து, “இந்தியாவில் ஒரு மசூதி தீவைக்கப்பட்டுள்ளது. இப்போது அந்த களிம்பு விற்பவர் மயூக்கும் பிஜேபி ஷுவென்றும் எங்கே? அனைவரும் காணொளியை பகிருங்கள், அனைவரும் பார்க்கட்டும், எதிர்ப்பு தெரிவிப்போம்!!” (அனைத்து எழுத்துப்பிழைகளும் மாறவில்லை.) என பதிவிட்டுள்ளார். இதே கோரிக்கையுடன் மேலும் பதிவுகளைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
இந்தியா டுடே வைரலான வீடியோவை உண்மைச் சரிபார்த்ததில் அது இந்தியாவில் இல்லை என்று கண்டறியப்பட்டது. மாறாக, இந்தோனேசியாவின் மத்திய சுலவேசியில் உள்ள தெங்கா மாகாணத்தில் உள்ள லுக்கில் இந்த ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி படமாக்கப்பட்டது. அந்த நேரத்தில், லூக்கில் உள்ள பசார் சென்ட்ரல் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ, உள்ளூர் அல்-இக்ஸான் மசூதிக்கும் பரவியது.
உண்மை சரிபார்ப்பு:
வைரலான பதிவையும் வீடியோவின் நம்பகத்தன்மையையும் சரிபார்க்க, அதன் கீஃப்ரேம்களைப் பயன்படுத்தி கூகுள் தேடுதல் செய்ததில், டிசம்பர் 8, 2024 அன்று டோலிடோலி நியூஸ் என்ற இந்தோனேசியாவை தளமாகக் கொண்ட ஊடகத்தின் Facebook பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டது. தீ விபத்து தொடர்பான மொத்தம் 8 புகைப்படங்கள் அங்கு பகிர்ந்து கொள்ளப்பட்டன. வைரலான வீடியோவில் உள்ள பிரேம் அல்லது மசூதியைப் போலவே புகைப்படம் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது. புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டு, "டிசம்பர் 8, ஞாயிற்றுக்கிழமை பாங்காயில் உள்ள லுக் சென்ட்ரல் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவை தளமாகக் கொண்ட மற்றொரு பேஸ்புக் பக்கத்தில், அதே மசூதியின் மேலும் 2 படங்களுடன், டிசம்பர் 8-ம் தேதி காலை 8 மணி முதல் 9 மணி வரை லுக் சென்ட்ரல் மார்க்கெட்டில் பாரிய தீ விபத்து ஏற்பட்டதாகவும், உள்ளூர் மசூதியை அழித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர், அந்தத் தகவலின் அடிப்படையில், மேலும் தேடுதலில் இந்தோனேசியாவை தளமாகக் கொண்ட ஊடகமான ட்ரிபன் நியூஸின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்திலும் இணையத்திலும் ஒரு அறிக்கை கிடைத்தது. மசூதியின் வீடியோ மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி 2 அறிக்கைகளும் எழுதப்பட்டன, “டிசம்பர் 8 அன்று காலை இந்தோனேசியாவின் சென்ட்ரல் சுலவேசியில் உள்ள பாங்காய் ரீஜென்சியில் உள்ள லுக் சென்ட்ரல் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஒரு விற்பனை நிலையத்தில் தீ பற்றத்தொடங்கியது. அது மத்திய சந்தையில் அமைந்துள்ள அல்-இக்ஸான் மசூதியை ஒட்டிய கடை. தீ வேகமாக பரவியது, மசூதி எரிந்தது மற்றும் அருகிலுள்ள டஜன் கணக்கான கடைகளும் எரிந்து நாசமாகின.
இந்த தகவலின் அடிப்படையில், கூகுள் மேப்பில் வைரலான மசூதியைத் தேடப்பட்டது. பின்னர், கூகுள் மேப்பில் கிடைத்த அல்-இக்ஸான் மசூதியின் படத்திற்கும் வைரல் வீடியோவிற்கும் இடையே சரியான பொருத்தம் இருப்பதைக் கண்டோம். கீழே, கூகுள் மேப்பில் இருந்து பெறப்பட்ட படத்தை வைரல் வீடியோவுடன் ஒப்பிட்டு பார்க்கலாம்.
இந்தியாவில் உள்ள மசூதிக்கு தீ வைக்கப்பட்டதாக இந்தோனேஷியாவில் இருந்து வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருவதை இது நிரூபிக்கிறது.
Note : This story was originally published by ‘AajTak’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.