'காவி உடை அணிந்த இஸ்கான் குரு காட்டுக்குள் ஆயுதப் பயிற்சி' என வைரலாகும் பதிவு உண்மையா?
This news Fact Checked by ‘AajTak’
இஸ்கான் கோயிலில் இருந்து வெளியேற்றப்பட்ட தலைவரும் வங்கதேசத்தின் சனாதானி ஜாக்ரன் ஜோட்டின் முகவருமான சின்மோய் கிருஷ்ண தாஸ் நவம்பர் 25 அன்று தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதில் இருந்து, நாட்டில் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் குறித்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த ஒட்டுமொத்த சூழ்நிலையில், ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
காவி உடை அணிந்த ஒருவர் காட்டிற்குள் கைத்துப்பாக்கியுடன் சுடுவதைக் காணலாம். மறுபுறம், மற்றொருவர் தலைக்கு மேல் குடையுடன் நிற்பதைக் காணலாம். காவி உடையில் துப்பாக்கியால் சுடுவது போல் காட்சியளிக்கும் அவர் இஸ்கான் குரு என்று வீடியோ பகிரப்பட்டு வருகிறது. மேலும் துப்பாக்கியால் சுடும் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
எடுத்துக்காட்டாக, ஒரு பேஸ்புக் பயனர் வைரல் வீடியோவைப் பகிர்ந்து, “ISKகள் பயிற்சியளிக்கின்றன. மேலும் முஸ்லிம்களாகிய நாங்கள் வீட்டில் அமர்ந்திருக்கிறோம். இன்று நமக்கு என்ன நேர்ந்தது?” என பதிவிட்டுள்ளார். மேலும், அதே வீடியோவை பகிர்ந்த மற்றொருவர், “அவர்கள் பயிற்சி செய்கிறார்கள். நாங்கள் இன்னும் தூங்குகிறோம். முஸ்லிம்களாகிய உங்களுக்கு என்ன ஆனது? நீங்கள் கலீத் பின் வலீதின் வாரிசுகளா?" (அனைத்து எழுத்துப்பிழைகளும் மாறவில்லை) தலைப்பில் #iskcon உடன் பகிர்ந்துள்ளார்.
இந்தியா டுடே வைரலான வீடியோவை சரிபார்த்ததில், வங்கதேசத்திற்கும் இஸ்கானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைக் கண்டறியப்பட்டது. வைரலான வீடியோ தாய்லாந்தில் இருந்து வந்தது மற்றும் துப்பாக்கியால் சுடும் நபர் ஒரு புத்த பிக்கு என கண்டறியப்பட்டது.
உண்மை சரிபார்ப்பு:
வைரலான வீடியோவின் கீஃப்ரேம் மற்றும் அதன் நம்பகத்தன்மையை சரிபார்ப்பதற்கான கூற்றைத் தேடும் போது, அதே வீடியோ இந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி தாய்லாந்து ஊடகமான தைரத் டிவியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் காணப்பட்டது. காட்டில் துறவி ஒருவர் சுடும் காட்சி என தாய் மொழியில் வீடியோ பகிரப்பட்டு விவரிக்கப்பட்டது.
பின்னர், அந்த ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்ட மேலும் தேடுதலில், 3 அக்டோபர் 2024 அன்று, மற்றொரு தாய் ஊடகமான தாய் பிபிஎஸ் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வைரலான வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்களுடன் ஒரு அறிக்கை கிடைத்தது. அங்கு காவி அங்கி அணிந்து காட்டில் துப்பாக்கியுடன் பயிற்சியில் ஈடுபட்டவர் புத்த துறவி என குறிப்பிடப்பட்டுள்ளது. அவரைக் கண்டுபிடிக்க விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், அடுத்தடுத்த தேடலில், தாய்லாந்தின் அரசு நடத்தும் ஊடகமான NBT Connext இன் அதிகாரப்பூர்வ Facebook பக்கத்தில், வைரலான வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்டுடன் ஒரு பதிவு கிடைத்தது. தாய்லாந்தின் தேசிய பௌத்த காரியாலயத்தின் பிரதிப் பணிப்பாளர் புஞ்சிட் கித்தரங்குன் வைரலான காணொளி குறித்து தனது கோபத்தையும் கவலையையும் வெளிப்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வைரல் வீடியோவில் உள்ள நபரைக் கண்டுபிடிக்க நிர்வாகத்திற்கு உதவுமாறு தாய்லாந்தில் உள்ள அனைத்து புத்த கோயில்கள் அல்லது மடங்களின் மடாதிபதிகளையும் அவர் கேட்டுக்கொண்டார்.
வைரலான வீடியோ குறித்த ISKCON இன் கருத்தைப் பெற பாங்காக்கில் (தாய்லாந்து) இருந்து ISKCON செய்தித் தொடர்பாளர் தேவயானி மாதாஜியைத் தொடர்புகொண்டபோது அவர், “இஸ்கான் வைரலான வீடியோவுடன் எந்த வகையிலும் தொடர்பு இல்லை. ஏனென்றால், உலகின் எந்தப் பகுதியிலும் உள்ள எங்கள் இஸ்கான் பக்தர்கள் மற்றும் பிரம்மச்சாரிகள் அனைவரும் கௌடியாக்கள் அல்லது பெங்காலிகளைப் போல வேட்டி மற்றும் குர்தாவை அணிவர், அவர்கள் அனைவரும் நிச்சயமாக தலையில் ஷிகா அல்லது டிக்கி வைத்திருப்பார்கள். ஆனால் வைரலான வீடியோவில் காணப்படும் துறவி இஸ்கான் பக்தர்களைப் போல் உடை அணியவில்லை. அவர் தலையில் ஒரு டிக்கி கூட இல்லை. வீடியோவைப் பார்த்தாலே அவர் ஒரு புத்த பிக்கு என்பது தெளிவாகிறது. ஏனென்றால் அவர்கள் அப்படித்தான் உடை அணிகிறார்கள்.
இஸ்கானின் கொல்கத்தா கிளையின் துணைத் தலைவர் ராதர்மன் தாஸும் இதையே கூறினார். அவர், “இஸ்கான் உறுப்பினராகவோ அல்லது பக்தராகவோ, ஒருவர் சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவராகவும், பகவான் கிருஷ்ணரை வணங்குபவராகவும் இருக்க வேண்டும். இஸ்கான் பிற மதத்தினருக்கு இக்கட்டான காலங்களில் துணை நின்றாலும், அவர்களால் இஸ்கானின் உறுப்பினர்களாகவோ அல்லது பக்தர்களாகவோ ஆக முடியாது.” என தெரிவித்தார். ISKCON இல் உறுப்பினராவதற்கு, அவர்கள் சனாதனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். இஸ்கான் பக்தர்களின் பல படங்களையும் பகிர்ந்து கொண்டார். வைரலான வீடியோவில் ராதர்மன் தாஸ் பகிர்ந்துள்ள படத்தை துறவியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் காணலாம்.
முடிவு:
இஸ்கான் குருவிடம் ஆயுதப் பயிற்சி பெற்றதாக தாய்லாந்து புத்த துறவி ஒருவர் கூறும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருவதை இது நிரூபித்துள்ளது.
Note : This story was originally published by ‘AajTak’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.