‘டெல்லியில் பள்ளிகளின் நிலை' என வைரலாகும் பதிவு உண்மையா?
This News Fact Checked by ‘The quint’
தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளிகளின் நிலையை காட்டுவதாக இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்து உண்மை சரிபார்ப்பை காணலாம்.
ஆம் ஆத்மி தலைமையிலான (ஏஏபி) டெல்லி அரசாங்கத்தின் கீழ் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலையைக் காட்டுவதாக, வெறும் சுவர்கள் மற்றும் மேசைகள், நாற்காலிகள் இல்லாத வகுப்பறையின் உட்புறத்தைக் காட்டும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது.
- இந்த பதிவு 2025 டெல்லி தேர்தலுக்கு முன்னதாக வந்துள்ளது. மேலும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் இல்லம் மற்றும் பள்ளியை ஒப்பிடும் வகையில் புகைப்படம் பகிரப்படுகிறது.
இந்தக் கூற்றைப் பகிரும் மற்றொரு பதிவை இங்கே காணலாம்.
ஆனால்...?: டெல்லி அரசால் நடத்தப்படும் பள்ளிகளின் வகுப்பறை புகைப்படத்தில் இல்லை.
- இது ஜூலை 2013ல், கெஜ்ரிவால் முதலமைச்சராக ஆவதற்கு சில மாதங்களுக்கு முன், பீகாரில் உள்ள சாப்ராவில் ஒரு பள்ளியைக் காட்டுகிறது.
உண்மை சரிபார்ப்பு
வகுப்பறையின் புகைப்படத்தில் தலைகீழ் படத் தேடல் நடத்தியபோது, இது பல செய்தி அறிக்கைகளை கண்டறிய உதவியது.
- 2014 முதல் பல ஆண்டுகளாக வெளியிடப்பட்ட இந்த கல்வி பற்றிய அறிக்கைகளில் ஒரே படத்தைக் கொண்டிருந்தன.
- 2018 இல் வெளியிடப்பட்ட தி க்விண்டின் அறிக்கை, பீகாரில் உள்ள ஒரு பள்ளியைக் காட்டுவதாகக் குறிப்பிடப்பட்டு அதே புகைப்படத்தையும் கொண்டுள்ளது.
- இதிலிருந்து ஒரு குறிப்பை எடுத்துக்கொண்டு, ராய்ட்டர்ஸ் பிக்சர்ஸ் காப்பகத்தில் 'சாப்ரா' என்ற முக்கிய சொல்லைப் பயன்படுத்தி புகைப்படத்தைப் பற்றிய கூடுதல் விவரங்கள் தேடப்பட்டன.
- 19 ஜூலை 2013 அன்று பீகாரின் சாப்ரா மாவட்டத்தில் உள்ள பிரஹிம்பூர் கிராமத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இங்கே காணலாம்.
முடிவு: பீகாரைச் சேர்ந்த 11 ஆண்டுகள் பழைய புகைப்படம், டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலையைக் காட்டுவதாக பொய்யாக பகிரப்படுகிறது.
Note : This story was originally published by ‘The quint’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.