“இந்தியா கூட்டணியின் மும்பை பொதுக்கூட்டத்தின் வீடியோ" என பகிரப்படும் பதிவு உண்மையா?
This News Fact Checked by ‘Newschecker‘
மும்பையில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்று பகிரப்படும் வீடியோ 2 ஆண்டுகளுக்கு முந்தையது என நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் கடந்த மே 18-ம் தேதி மும்பையில் நடந்தது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ 2 ஆண்டுகள் பழமையானது என நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
உண்மை சரிபார்ப்பு:
இந்தியா கூட்டணியின் மும்பை பொதுக்கூட்டத்தின் எடுக்கப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடப்பட்டது.
முடிவு:
இந்தியா கூட்டணியின் மும்பை பொதுக்கூட்டத்தின் வீடியோ என்று பரப்பப்படும் வீடியோ இரண்டுகளுக்கு பழைய வீடியோவாகும். அவ்வீடியோவானது 2022 மே மாதத்தில் சிவசேனா கட்சி மும்பையில் நடத்திய பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகும். இது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
Note : This story was originally published by ‘Newschecker’ and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.