Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ஆளுங்கட்சி வரிசையோடும், சபாநாயகரோடும் முடிந்துவிட்டதா சட்டப்பேரவை?” - இபிஎஸ் கேள்வி!

11:40 AM Jan 09, 2025 IST | Web Editor
Advertisement

ஆளுங்கட்சி வரிசையோடும், சபாநாயகரோடும் முடிந்துவிட்டதா சட்டப்பேரவை? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

Advertisement

கூட்டத்தொடருக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த தங்கள் எம்எல்ஏக்களை சட்டசபை கேமராக்களில் காண்பிக்கவில்லை என நேற்று அதிமுக சார்பில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், “ஆளுங்கட்சி வரிசையோடும், சபாநாயகரோடும் முடிந்துவிட்டதா சட்டப்பேரவை?” என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

“ஆளுங்கட்சி வரிசையோடும், சபாநாயகரோடும் முடிந்துவிட்டதா சட்டப்பேரவை? சட்டப்பேரவையின் கேமராக்கள் இன்றும் எதிர்க்கட்சியின் பக்கம் திரும்பவே இல்லை. எதிர்க்கட்சி வரிசை உங்களை அவ்வளவு அச்சுறுத்துகிறதா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே?

எதற்காக இவ்வளவு அஞ்சி நடுங்குகிறீர்கள்? "#யார்_அந்த_SIR?" என்ற நீதிக்கான கேள்வி உங்களை அவ்வளவு உறுத்துகிறது என்றால், மீண்டும் கேட்கிறேன் , யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது இந்த திமுக அரசு? மக்கள் நலனுக்கான, எதிர்க்கட்சியின் கேள்விகளை மக்கள் பார்த்துவிடக் கூடாது என்று திமுக அரசு எத்தனிப்பது ஜனநாயகப் படுகொலை!

தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை, எந்தவித ஒளிவு மறைவுமின்றி, முழுமையாக, மக்களின் குரலான எதிர்க்கட்சியின் கருத்துக்களை மக்களுக்கு நேரடி ஒளிபரப்ப வேண்டுமென  திமுக அரசை வலியுறுத்துகிறேன். தமிழ்நாடு சட்டமன்றம், பொதுமக்களின் தேவையை சபையேற்றி, சட்டமியற்றி, திட்டமியற்றி செயல்படும் தமிழக மக்களின் மேடை; திமுகவின் பொதுக்கூட்ட மேடையல்ல!” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Tags :
ADMKAppavuDMKedappadi palaniswamiEPSMK Stalinspeaker
Advertisement
Next Article