For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விஜய் 69 படத்தில் இணைகிறாரா 'பிரேமலு’ நடிகை?

10:00 AM Aug 05, 2024 IST | Web Editor
விஜய் 69 படத்தில் இணைகிறாரா  பிரேமலு’ நடிகை
Advertisement

விஜய் 69 படத்தில் பிரேமலு பட புகழ் மமிதா பைஜூ மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘தி கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (The G.O.A.T. – Greatest Of All Times) வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாக உள்ளது. முன்னதாக, விசில் போடு மற்றும் சின்னச் சின்ன கண்கள் ஆகிய இரண்டு பாடல்களைப் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.சின்ன சின்ன கண்கள் பாடல் மறைந்த பாடகியும் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரணியின் குரலில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல மெலோடியாக கொண்டாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விஜய் 69 படத்தை ஹெச்.வினோத் இயக்கவுள்ளார். விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளதால் சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் விஜய் 69 படம்தான் கடைசி படமாகும்.

இப்படத்தை  உறுதி படுத்தும் வகையில் எச். வினோத் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் சென்னையில் ஆபிஸ் போடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இது ஒரு அரசியல் அதிரடி திரைப்படமாக அமையவுள்ளது. மேலும் இப்படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்க, அனிருத் இசையமைக்க உள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.படப்பிடிப்பு பணிகள் வரும் நவம்பர் மாதம் தொடங்கப்படும் என்ற தகவல் வெளியாகியது.

இந்த நிலையில்  பிரேமலு பட புகழ் மமிதா பைஜூ இப்படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் லுக் டெஸ்ட் பணிகள் தற்பொழுது நடந்துக் கொண்டு இருப்பதாகவும், அது முடிவடைந்த பின் படத்தின் படப்பிடிப்பு பணிகள் மற்றும் அதிகாரப் பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement