அமைச்சர் அன்பில் மகேஸ் என்னுடன் விவாதம் செய்ய தயாரா? - சீமான் கேள்வி!
தமிழ்நாடு, திராவிட நாடா? தமிழ்நாடா? என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி என்னுடன் நேரில் விவாதம் செய்ய தயாரா..? என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாமக்கலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது;
தமிழ்நாடு, திராவிட நாடா? தமிழ்நாடா? என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் விவாதம் செய்ய தயாரா..? இடத்தை அவர் தேர்வு செய்ய தயாரா..? யார் திராவிடர்..? நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் புதிய தமிழ்த்தாய் வாழ்த்து உருவாக்கப்படும். தமிழ்நாடு அமைச்சரவையில் எத்தனை தமிழர்கள் உள்ளனர்..? விரல் விட்டு எண்ண முடியுமா…?
திருமாவளவன் முதலமைச்சராக வருவதை வரவேற்கிறேன். அவருக்கு அதற்கான தகுதி உள்ளது. ஒரு தமிழராக, தம்பியாக என்னை விட அவர் முதலமைச்சர் ஆகுவதை எண்ணிப் பெருமைப் படுகிறேன். திருமாவளவன் முதலமைச்சராக வரகூடாது என கூறுவதற்கு எல்.முருகன் யார்?. எல் முருகன் மட்டும் இரண்டு முறை மத்திய அமைச்சர் ஆகலாமா ? தமிழர் நிலத்தில் தமிழர் திருமாவளவன் முதல்வர் ஆக கூடாதா?
உள் இடஒதுக்கீடுக்கு எதிராக வழக்கு போட்டால், முதல்வராக்க விடமாட்டீங்களா ? உள் இடஒதுக்கீட்டை எதிர்க்கின்றோம். இட ஒதுக்கீட்டை வரவேற்கின்றோம். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை கண்டு திமுக பயப்படும். நேர்மையாளனாக, நல்ல ஆட்சியை கொடுத்திருந்தால் எதைக்கண்டும் பயப்பட தேவையில்லை. ஈஷா யோகா மையத்தில் நடப்பதை தடுக்க முடியாது. இங்குள்ள இரு கட்சியினருக்கு தெரியாமல் எல்லாம் நடக்கிறதா? பிரதமருடன் ஜக்கிவாசுதேவ் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளார். பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் அங்கு வருகின்றனர்.
யானை வழித்தடத்தை ஆக்கிரமித்து, ஈஷா யோகா மையம் கட்டப்பட்டுள்ளது என சொன்ன போது, அரசே இல்லை என கூறுகிறது” என்றார்.