For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாலில் கலப்படமா? கேரள உணவு பாதுகாப்புத்துறை சோதனை!

தமிழக, கேரளா எல்லையில் கேரள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முகாமிட்டு தீவிர சோதனை நடத்தவுள்ளனர்.
07:36 AM Sep 03, 2025 IST | Web Editor
தமிழக, கேரளா எல்லையில் கேரள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முகாமிட்டு தீவிர சோதனை நடத்தவுள்ளனர்.
பாலில் கலப்படமா  கேரள உணவு பாதுகாப்புத்துறை சோதனை
Advertisement

தமிழகத்திலிருந்து நாள்தோறும் ஏராளமான வாகனங்களில் கேரளாவிற்கு பால் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில், தற்போது ஓணம் பண்டிகை நெருங்குவதால் பாலின் தேவைகள் அதிகமாக இருப்பதன் காரணமாக, வழக்கத்தைவிட கூடுதலாக பால் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

Advertisement

குறிப்பாக, தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் பாலில் ஒரு சில நபர்கள் கலப்படம் செய்துள்ளதாகவும், தரம் குறைந்து காணப்படுவதாகவு கேரள உணவு பாதுகாப்பு துறையினருக்கு சில புகார்கள் வந்துள்ளது.

இந்த நிலையில், தமிழக-கேரள எல்லைப் பகுதியான ஆரியங்காவு பகுதியில் கேரள உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் முகாமிட்டு தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் அனைத்து பால் வாகனங்களையும் முறையாக சோதனை நடத்தவுள்ளனர். மேலும் நடமாடும் சோதனை மையத்தில் பாலை பரிசோதனை செய்த பிறகே கேரளாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படவுள்ளனர். இதற்காக தமிழக, கேரளா எல்லையில் கேரள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முகாமிட்டு தீவிர சோதனை நடத்தவுள்ளனர்.

Tags :
Advertisement