அமிர்தசரஸ் தொகுதியில் பாஜக 33% வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கும் என வெளியான கருத்துக்கணிப்பு உண்மையா?
This news fact checked by ‘Logically Facts‘
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மக்களவைத் தொகுதியில் பாஜக 33% வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கும் என இந்தியா டுடே கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளதாக பரவும் செய்தி போலியானது என கண்டறியப்பட்டது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் மக்களவைத் தேர்தலுக்காக 'இந்தியா டுடே' செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின் படம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகிறது. அதில், அமிர்தசரஸ் மக்களவைத் தொகுதியில் பாஜக 33% வாக்குகள், காங்கிரஸ் 28%, ஆம்ஆத்மி கட்சி 25% மற்றும் சிரோமணி அகாலி தளம் 10% வாக்குகளைப் பெறும் என்று குறிப்பிட்டுள்ளது.
இதனை ட்விட்டர் (எக்ஸ்) மற்றும் முகப்புத்தகம் பயனர்கள், அமிர்தசஸில் பாஜக வேட்பாளர் தரன்ஜித் சிங் சந்து வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளதாக பகிர்ந்துள்ளனர்.
இதுகுறித்த உண்மை சரிபார்ப்பில், அமிர்தசரஸில் பாஜக வெற்றி பெற்றதாக கணிக்கும் வைரலான புகைப்படம் கற்பனையானது என்று கண்டறியப்பட்டுள்ளது.
உண்மை சரிபார்ப்பு:
இதுகுறித்த தேடலின் முதல்படியாக, இந்தியா டுடேயின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்பட்டன. ஆனால் 2024-ம் ஆண்டு அமிர்தசரஸ் மக்களவைத் தொகுதி கருத்துக் கணிப்புகள் போன்ற எந்த பதிவோ, செய்தியோ எதுவும் இல்லை. அவர்களின் யூடியூப் சேனலிலும் இதுபோன்ற கணிப்புகள் குறித்த எந்த வீடியோ அறிக்கையையும் இல்லை.
மேலும், மார்ச் 2022 இல் உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல்களின் போது, இந்தியா டுடே இதே டெம்ப்ளேட்டை பல்வேறு மாநிலங்களுக்கான தேர்தல் கணிப்புகளுக்குப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இருப்பினும், 2024-ம் ஆண்டு அமிர்தசரஸ் மக்களவைத் தொகுதிக்கான அதே டெம்ப்ளேட்டைப் பயன்படுத்தி இந்தியா டுடே கருத்துக்கணிப்பு கணிப்பு எதுவும் இல்லை.
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, 2024 பொதுத் தேர்தலின் ஏழு கட்டங்களுக்கான வாக்குப்பதிவு முடியும் வரை, ஜூன் 1ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு முன் கருத்துக் கணிப்புகளை ஒளிபரப்பவோ அல்லது வெளியிடவோ முடியாது.
முடிவு:
அமிர்தசரஸ் மக்களவைத் தொகுதிக்கான இந்தியா டுடேயின் எக்ஸிட் போல் கணிப்புகளைக் காட்டும் கிராஃபிக் புகைப்படம் கற்பனையானது. அந்த கிராபிக்ஸ் நம்பகத்தன்மையற்றது என்றும் அந்த செய்தி சேனல் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, இந்தக் கூற்று போலியானது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
Note : This story was originally published by ‘Logically Facts‘ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.