#Ireland-ல் சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு!
அயர்லாந்தில் உள்ள கவுண்டி கார்லோ நகரில் வசித்து வந்தவர்கள் செருகுரி சுரேஷ் சவுத்ரி மற்றும் பார்க்லகவ் சிந்தூரி. இந்தியாவை சேர்ந்த இவர்கள் அயர்லாந்தில் உள்ள ஒரு தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர். இவர்கள் இருவரும் தனது நண்பர்கள் 2 பேருடன் கார்லோ நகரில் வாடகை வீட்டில் தங்கி படித்து வந்தனர்.
இந்த சூழலில், நண்பர்கள் 4 பேரும் ஆடி காரில் மவுன்ட் லெய்ன்ஸ்டர் பகுதியில் இருந்து கார்லோ நகருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அக்கம் பக்கத்தினர் இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் செருகுரி சுரேஷ் சவுத்ரி மற்றும் பார்கவ் சிந்தூரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்ததது. மற்ற இருவரும் படுகாயம் அடைந்தனர். போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சைக் அளிக்கப்பட்டு வருகிறது. அயார்லாந்தில் நடந்த கார் விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.