பாகிஸ்தான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி!
பாகிஸ்தான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.
ஈரான் எல்லையையொட்டிய பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் சன்னி பிரிவு ஜெய்ஷ் அல் செயல்பட்டு வருகிறது.முன்னதாக, பாகிஸ்தான் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கு பதில் கொடுக்கும் விதமாக ஈரான் ஏவுகணைகளை கொண்டு தாக்குதலை மேற்கொண்டு உள்ளனர். அதில் பயங்கரவாத அமைப்பின் 2 நிலைகள் மீது ஈரான் செவ்வாய்க்கிழமை ( 16.01.2024) ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் அதிரடி தாக்குதல் நடத்தியது.
இதையும் படியுங்கள் : வடகலை தென்கலை இடையே அடிதடி – கொலை மிரட்டல் அளவுக்கு சென்ற கொடூரம்!
பாகிஸ்தானில் இரண்டு இடங்களில் ஈரான் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் ஈரான் பாதுகாப்புப் படையினர் மீது அந்த தீவிரவாத அமைப்பு முன்பு தாக்குதல் நடத்தியது. "இரண்டு தளங்கள் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன" என்று ஈரானிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வான்வழி தாக்குதலில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். மேலும், சிறுமிகள் 3 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், தென்மேற்கு ஈரானின் சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் பகுதியில் இன்று (ஜன.18) அதிகாலை நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஏழு பேர் பலியானதாக மாகாணத்தின் துணை ஆளுநர் அலிரேசா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். இதனிடையே, பாகிஸ்தான் தாக்குதலுக்கு ஈரான் இன்று பதில் தாக்குதல் கொடுத்தது.