Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"தோனியுடனும், ருதுராஜ் தலைமையிலும் களமிறங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" - சிஎஸ்கே அணிக்கு திரும்பிய அஸ்வின் நெகிழ்ச்சி!

09:27 AM Nov 25, 2024 IST | Web Editor
Advertisement

தோனியுடனும், ருதுராஜ் தலைமையிலும் களமிறங்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என கிரிக்கெட் வீரர்அஸ்வின் தெரிவித்துள்ளார்.

Advertisement

18-வது ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் ஜெட்டா நகரில் நேற்றும், இன்றும் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரரான சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.9.75 கோடிக்கு வாங்கியுள்ளது. அஸ்வின் 2008 முதல் 2015 வரை ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியுள்ளார். தற்போது 9 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அஸ்வின் சென்னை அணியில் இணைந்திருப்பது குறிப்பிடதக்கது. இது குறித்து அஸ்வின் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது :

" வாழ்க்கை ஒரு வட்டம் என சொல்வார்கள். 2008 முதல் 2015ம் ஆண்டு வரை முதல் முறையாக மஞ்சள் ஜெர்சியை அணிந்து சென்னை அணிக்கு விளையாடியதில் இருந்து, அந்த அணிக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். சென்னை அணியில் விளையாடியது, கற்றுக்கொண்டது தான் சர்வதேச போட்டிகளில் நான் இவ்வளவு தூரம் பயணிக்கு உதவியுள்ளது.

சென்னை அணிக்காக நான் கடைசியாக விளையாடி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. 2015ம் ஆண்டு கடைசியாக விளையாடியேனேன். எப்படி சொல்வது என தெரியவில்லை. சென்னை அணி மீண்டும் என்னை தேர்வு செய்துள்ளது. விலை, ஹோம்கமிங் என பல்வேறு விதமாக கூறினாலும், 2011ம் ஆண்டு சண்டை போட்டு என்னை ஏலத்தில் எடுத்தது போன்று மீண்டும் எடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

இதையும் படியுங்கள் : நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் – இன்று முதல் தொடக்கம்!

மிகவும் சிறந்த உணர்ச்சிகள் அது. அன்புடென் ஃபேன்ஸ் என்பதை கடந்த 9-10 ஆண்டுகளாக பார்க்கிறேன். ராஜஸ்தான் அணிக்காக விளையாடும்போதெல்லாம், சென்னை அணிக்கு எதிராக களமிறங்கும்போது கடினமாக இருந்தது. அந்த அணிக்கு விளையாடும்போது ரசிகர்கள் எனக்காக குரல் எழுப்பமாடார்கள். இந்நிலையில் மீண்டும் அணிக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தோனியுடனும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலும் களமிறங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்"

இவ்வாறு அவர் அந்த வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

Tags :
AshwinIPL2025IPLAuctionIPLaUCTION2025News7Tamilnews7TamilUpdatesRavichandranAshwin
Advertisement
Next Article