#IPL2025 | பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆகிறார் ரிக்கி பாண்டிங்?
பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன், அவர் கடந்த 7 ஆண்டுகளாக டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) பயிற்சியாளராக இருந்தார், இருவரும் இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரிந்தனர். சமீபத்தில் வெளியான தகவலின்படி, பாண்டிங் PBKS உடன் ஒரு வருடத்திற்கும் மேலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது, பஞ்சாபின் பயிற்சியாளர் குழுவில் ட்ரெவர் பெய்லிஸ் (தலைமை பயிற்சியாளர்), சஞ்சய் பாங்கர் (கிரிக்கெட் மேம்பாட்டுத் தலைவர்), சார்ல் லாங்கேவெல்ட் (வேகப் பந்துவீச்சு பயிற்சியாளர்) மற்றும் சுனில் ஜோஷி (சுழல் பந்துவீச்சு பயிற்சியாளர்) ஆகியோர் உள்ளனர். இனி பாண்டிங்கின் புதிய அணியில் இடம் பெறுவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
PBKS தனது பிரச்சாரத்தை 2024 இல் 9 வது இடத்தில் முடித்தது. 2014 முதல், PBKS அணி பிளேஆஃப்களுக்கு தகுதி பெற முடியவில்லை. ஷிகர் தவான் ஓய்வுக்குப் பிறகு கேப்டன் தேர்வும் பாண்டிங்கிற்கு மற்றொரு தலைவலியாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. பாண்டிங் முன்பு மும்பை இந்தியன்ஸ் (MI) உடன் ஒரு ஆலோசகராகவும், பின்னர் 2013 மற்றும் 2016 க்கு DC க்கு இடையில் தலைமை பயிற்சியாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.