For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஐபிஎல் 2025: குஜராத் அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்!

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
07:12 PM Apr 28, 2025 IST | Web Editor
ஐபிஎல் 2025  குஜராத் அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்
Advertisement

10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெறும் 47-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

Advertisement

போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் குஜராத் அணி பேட்டிங் செய்கிறது. சஞ்சு சாம்சன் தலைமையிலான  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றி, 7-ல் தோல்வி என 4 புள்ளியுடன் 9-வது இடத்தில் இருக்கிறது.

அதேநேரத்தில், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று வலுவான நிலையில் காணப்படுகிறது. அந்த அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தவே நினைக்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

Tags :
Advertisement