ஐபிஎல் 2024 : குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!!
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 36ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதேபோல இரண்டாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.
இப்போட்டி பஞ்சாபில் உள்ள மகாராஜா யத்வீந்தர் சிங் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சு செய்ய உள்ளது.
புள்ளிப் பட்டியலில் தற்போது பஞ்சாப் அணி 9வது இடத்திலும், குஜராத் பஞ்சாபை விட இரண்டு புள்ளிகளுடன் அதிகம் பெற்று 8வது இடத்திலும் உள்ளது. இந்த போட்டியின் வெற்றியின் மூலம் அடுத்த இடத்திற்கு எந்த அணி முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் முதலில் பேட்டிங்கில் களமிறங்கும் பஞ்சாப் அணியின் ப்ளேயிங் லெவனில் எந்தவித மாற்றமும் இல்லை. அதன்படி சாம் குர்ரன் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், ரிலீ ரோசோவ், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (WK), ஷஷாங்க் சிங், அசுதோஷ் சர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் களமிறங்குகின்றனர்.