For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஐ.பி.எல் 2024 | பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதல்!

07:35 AM Apr 13, 2024 IST | Web Editor
ஐ பி எல் 2024   பஞ்சாப் கிங்ஸ்   ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதல்
Advertisement

முல்லாப்பூரில் நடைபெறும் 27-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

Advertisement

17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) முல்லாப்பூரில் நடைபெறும் 27-வது லீக் ஆட்டத்தில் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் - சஞ்சு சாம்சன் தலைமையலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

பஞ்சாப் அணி விளையாடிய 5 ஆட்டங்களில் 2ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி விளையாடிய 5 ஆட்டங்களில் 4ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ராஜஸ்தான் 15 ஆட்டங்களிலும், பஞ்சாப் 11 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

Advertisement