“நம்மைவிட ஆளுநர் நன்றாக அரசியல் செய்கிறார்” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
சமத்துவ பொங்கல் 2025-ஐ முன்னிட்டு சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 4000 நபர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
நாடாளுமன்ற தேர்தலில் 1 தொகுதியிலாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என பிரதமர் மோடி நினைத்தார். ஆனால் அது நடைபெறவில்லை. ஒவ்வொரு வாக்களர்களையும் அடிக்கடி சந்தித்து அவர்களது குறையை கேட்டறிந்து நிறைவேற்றுங்கள். அரசு என்ன கொடுக்கிறதோ அதை படித்துவிட்டு செல்ல வேண்டும். அதுதான் ஆளுநரின் வேலை. தமிழ்நாட்டில் அரசியல் செய்ய ஒருவர் இருக்கிறார். தமிழ்நாடு ஆளுநர் சட்டமன்றத்தில் வாக்கிங் செல்கிறார்.
அவர் வருவதும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை. நாம் அரசியல் செய்கிறோமோ இல்லையோ ஆளுநர் அரசியல் செய்கிறார்.
தமிழ்நாட்டுடைய பெயரை மாற்ற வேண்டும் என சொன்னவர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களும் எதிர்ப்பு தெரிவித்தவுடன் மன்னிப்பு கேட்டார். அதன்பிறகு திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசினார். புதிய கல்விக் கொள்கை என்ற ஒன்றை கொண்டு வருகிறார்கள். விஸ்வகர்மா திட்டம்
திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ஆளுநர் சொல்கிறார். குலக்கல்வி திட்டத்தை எப்படி ஏற்று கொள்ள முடியும்?.
இதற்கெல்லாம் திமுகதான் எதிர்ப்பு தெரிவித்து கொண்டு இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை. வித்தியாசமான எதிர்கட்சித் தலைவரை நாம் பெற்றிருக்கிறோம். அவர்தான் எடப்பாடி பழனிசாமி.
சட்டமன்றத்தில் பேசும்போது ஆளுநரை ஏன் திரையில் காட்டவில்லை என கேட்கிறார். ஆளுநர் பேசுவதை ஏன் காட்டவில்லை என கேட்கிறார். அவர் பேசவில்லை என்றாலும் அவர் வந்து போவதையாவது காட்டுங்கள் என்று பேசுகிறார்.
எடப்பாடி பழனிசாமி உறவினர் வீட்டில் 700 கோடி அளவிற்கு வரியைப்பு
நடந்திருக்கிறது. சோதனை நடத்திய அன்றே பாஜகவுடன் சென்று விடுவார் என்று நினைத்தேன். மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை திமுக செய்திருக்கிறது. எந்த நேரத்திலும், எந்த பண்டிகையிலும் எந்த மழை வந்தாலும் களத்தில் மக்களுடன் நிற்பவன் தான் திமுக தொண்டன்” என தெரிவித்தார்.