For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஐபிஎல் 2024 - அதிகாரபூர்வமாக விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் வெளியீடு.!

07:16 PM Nov 26, 2023 IST | Web Editor
ஐபிஎல் 2024   அதிகாரபூர்வமாக விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் வெளியீடு
Advertisement

ஐபிஎல் 2024 தொடரில் அதிகாரபூர்வமாக விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

ஐபிஎல் 2024 தொடருக்கான மினி ஏலம், வரும் டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் தங்கள் அணிகளில் தக்கவைத்துக்கொள்ள விரும்பும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்கள் குறித்து அறிவிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது.

அதற்கான கடைசி நாள் இன்று என்பதால், மாலை 4 மணிக்குள் ஐபிஎல் அணிகள் இந்த பட்டியலை வெளியிட அவகாசம் வழங்கப்பட்டது இந்த நிலையில் 10 அணிகளும் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ பட்டியல்கள்.

இந்த பட்டியலில் விடுவிக்கப்பட்ட வீரர்கள், டிசம்பர் 19 இல் மினி ஏலத்தில் மற்ற அணிகளால் வாங்கப்படுவார்கள். தக்கவைக்கபட்ட வீரர்கள், அதே அணியில் தொடர்வார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்ட வீரர்கள்:

பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், அம்பதி ராயுடு, சிசண்டா மகலா, கைல் ஜேமிசன், பகத் வர்மா, சேனாபதி, ஆகாஷ் சிங்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விடுவித்த வீரர்கள்:

வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஃபின் ஆலன், ஜோஷ் ஹேசில்வுட், மைக்கேல் பிரேஸ்வெல், டேவிட் வில்லி, வெய்ன் பார்னல், சோனு யாதவ், அவினாஷ் சிங், சித்தார்த் கவுல், கேதர் ஜாதவ்.

மும்பை இந்தியன்ஸ் அணி விடுவித்த வீரர்கள்:

முகமது அர்ஷத் கான், ராமன்தீப் சிங், ஹிருத்திக் ஷோக்கீன், ராகவ் கோயல், ஜோஃப்ரா ஆர்ச்சர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டுவான் ஜான்சன், ஜே ரிச்சர்ட்சன், ரிலே மெரிடித், கிறிஸ் ஜோர்டான், சந்தீப் வாரியர்.

குஜராத் டைட்டன்ஸ் அணி விடுவித்த வீரர்கள்:

யாஷ் தயாள், கே.எஸ். பாரத், சிவம் மாவி, உர்வில் படேல், பிரதீப் சங்வான், ஒடியன் ஸ்மித், அல்ஜாரி ஜோசப், தசுன் ஷனகா. - கேப்டன் ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் தக்கவைத்தது! அவர் மும்பை இந்தியன்ஸுக்கு திரும்புவது குறித்த பரவிய தகவல் உண்மையில்லை என அறிவிப்பு.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விடுவித்த வீரர்கள்:

ஜெய்தேவ் உனத்கட், டேனியல் சாம்ஸ், மன்னன் வோஹ்ரா, ஸ்வப்னில் சிங், கரண் சர்மா, அர்பித் குலேரியா, சூர்யன்ஷ் ஷெட்ஜ், கருண் நாயர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விடுவித்த வீரர்கள்:

ஹாரி புரூக், சமர்த் வியாஸ், கார்த்திக் தியாகி, விவ்ராந்த் சர்மா, அகேல் ஹொசைன், அடில் ரஷித்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்த வீரர்கள்:

ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், ஆர்யா தேசாய், டேவிட் வைஸ், ஷர்துல் தாக்கூர், நாராயண் ஜெகதீசன், மந்தீப் சிங், குல்வந்த் கெஜ்ரோலியா, லாக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, ஜான்சன் சார்லஸ்.

பஞ்சாப் கிங்ஸ் அணி விடுவித்த வீரர்கள்:

பானுகா ராஜபக்சே, மோஹித் ரதீ, பால்தேஜ் தண்டா, ராஜ் அங்கத் பாவா, ஷாருக் கான்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விடுவித்த வீரர்கள்:

ஜோ ரூட், அப்துல் பாசித், ஜேசன் ஹோல்டர், ஆகாஷ் வசிஷ்ட், குல்தீப் யாதவ், ஓபேட் மெக்காய், முருகன் அஷ்வின், கே.சி கரியப்பா, கே.எம்.ஆசிப்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி விடுவித்த வீரர்கள்:

ரிலீ ரோசோவ், சேத்தன் சகாரியா, ரோவ்மேன் பவல், மணீஷ் பாண்டே, பில் சால்ட், முஸ்தாபிசுர் ரஹ்மான், கமலேஷ் நாகர்கோட்டி, ரிபால் பட்டேல், சர்பராஸ் கான், அமன் கான், பிரியம் கார்க்.

Tags :
Advertisement