For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

IPL 2024 : டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு தேர்வு!

08:17 PM Apr 11, 2024 IST | Web Editor
ipl 2024   டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு தேர்வு
Advertisement

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

Advertisement

17-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் தொடங்கி மே 26 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்நிலையில் இன்றைய போட்டி  மகாராஷ்டிராவில் உள்ள வான்கடே மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள் : வெளியானது நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் ‘குரங்கு பெடல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் 3 போட்டிகளில் தோல்வியைத் தழுவிய மும்பை இந்தியன்ஸ் அணி, கடந்த போட்டியில் வெற்றி பெற்றது. இன்னிலையில், இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று மும்பை இந்தியன்ஸ் தனது வெற்றிப் பயணத்தை தொடருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Image

Tags :
Advertisement