ஐபிஎல் 2024 : MI vs LSG - டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு!
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் 17வது சீசன் போட்டி மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி மே 26-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இதையும் படியுங்கள் : பயனர்களின் தரவுகளை முறைகேடாக பயன்படுத்திய Facebook - 2016 அமெரிக்க தேர்தலும் கேம்ப்ரிட்ஜ் அனால்டிக்கா மீதான குற்றச்சாட்டுகளும்!
நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 47வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. சிறப்பாக விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 154 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது . அதன் மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றது.
இதையடுத்து, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லக்னோவில் உள்ள ஏகானா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் இன்று நடைபெறும் 48-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் லக்னோ அணி 9 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. அதில் 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளி பெற்றுள்ளது. மேலும் புள்ளி பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது. அதேபோல 5 முறை சாம்பியனான மும்பை அணி இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி உள்ள நிலையில் 3 வெற்றி, 6 தோல்வியுடன் 6 புள்ளி பெற்றுள்ளது.மேலும் புள்ளி பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது.
குறிப்பாக மும்பை அணிக்கு எஞ்சிய 5 ஆட்டங்களும் முக்கியமானதாகும். ஒரு ஆட்டத்தில் தோற்றாலும் அந்த அணியின் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்து விடும். இந்த நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.