For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் - 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் SRH தோல்வி!

06:53 AM May 22, 2024 IST | Web Editor
கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்   8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் srh தோல்வி
Advertisement

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

Advertisement

மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17வது சீசன், அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் மே 19-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், நேற்று (மே 21) முதல் ப்ளே ஆஃப் சுற்று போட்டிகள் நடைபெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்து, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

அதன்படி, நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் அணி எது என்பதை இறுதி செய்யும், முதல் குவாலிஃபையர் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின.

இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள, நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து, 19.3 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி சார்பில் ஸ்டார்க் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இந்நிலையில், 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களமிறங்கியது. இந்த அணியின் தொடக்க வீரராக ரஹ்மனுல்லா குர்பஸ் மற்றும் சுனில் நரைன் இருவரும் களமிறங்கினர். சிறப்பாக விளையாடி வந்த ரஹ்மனுல்லா குர்பஸ் 14 பந்துகளில் 23 ரன்களை எடுத்தார். பின்னர், 21 ரன்கள் எடுத்த நிலையில், சுனில் நரைன் வெளியேறினார்.

தொடர்ந்து, களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்து, தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிபட்டுத்தி அரை சதம் விளாசினர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து, 13.2 ஓவர்களில் இலக்கை கடந்து, 164 ரன்களை விளாசி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணியில் பேட் கம்மிங் மற்றும் நடராஜன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதி போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நுழைந்தது.

Tags :
Advertisement