For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஐபிஎல் 2024 | ஹைதராபாத் சன் ரைசர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதல்!

09:33 AM May 19, 2024 IST | Web Editor
ஐபிஎல் 2024   ஹைதராபாத் சன் ரைசர்ஸ்   பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதல்
Advertisement

ஐபிஎல் டி20 தொடரின் 69வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.  

Advertisement

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது.  இதுவரை 68 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன.  இன்றுடன் லீக் சுற்று ஆட்டம் முடிவுக்கு வருகிறது.  அதன்படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,  ராஜஸ்தான் ராயல்ஸ், ஹைதராபாத் சன் ரைசர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.  இந்த நிலையில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இதில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 69-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.  பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள ஹைதராபாத் அணி 13 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 15 புள்ளிகள் பெற்று,  புள்ளிபட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

ஹைதராபாத் அணி இந்த சீசனில் 3 முறை 260 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது.  தொடர்ந்து, பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த பஞ்சாப் அணி 13 போட்டிகளில் 5 வெற்றிகளுடன்,  10 புள்ளிகள் பெற்றுள்ளது.  இவ்விரு அணிகளும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.  இதில் ஹைதராபாத் அணி 15 முறையும், பஞ்சாப் அணி 7 முறையும் வெற்றி பெற்று இருக்கின்றன.

ராஜஸ்தான்-கொல்கத்தா மோதல்

அடுத்ததாக கவுகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 70வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.  ராஜஸ்தான் அணி 13 ஆட்டங்களில் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

கொல்கத்தா அணி 13 ஆட்டங்களில் 9 வெற்றிகளுடன் 19 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.  இவ்விரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.  இதில் இரு அணிகளும் தலா 14 முறை வெற்றி பெற்றுள்ளன.

Tags :
Advertisement