For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

IPL 2024: சென்னை - லக்னோ அணிகள் இன்று பலப்பரீட்சை!

08:04 AM Apr 19, 2024 IST | Web Editor
ipl 2024  சென்னை   லக்னோ அணிகள் இன்று பலப்பரீட்சை
Advertisement

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் லக்னோ மற்றும் சென்னை ஆகிய அணிகள் மோத உள்ளன.

Advertisement

17வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி மே 26-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இதையும் படியுங்கள் : மக்களவைத் தேர்தலை ஒட்டி, சிறப்பு Doodle வெளியிட்ட Google நிறுவனம்...!

இந்நிலையில், 34வது லீக் போட்டி லக்னோ உள்ள ஏகானா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் இன்று  இரவு 7.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும் மோத உள்ளனர்.

இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தமாக ஆறு ஆட்டங்கள் விளையாடி உள்ளது. அதில் நான்கு ஆட்டத்தில் வெற்றியும், இரண்டு ஆட்டத்தில் தோல்வியும் கண்டுள்ளது. இதையடுத்து, நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஆறு ஆட்டங்கள் விளையாடி உள்ளது. அதில் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. மூன்று ஆட்டங்களில் தோல்வியும் கண்டுள்ளது. கடைசியாக விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்று பெற்றுள்ளது. அதே உத்வேகத்துடன் இன்றைய போட்டியிலும் வெற்றி பெற தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.  எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement