ஆஸ்கர் போட்டிக்கு தேர்வான ‘ஹோம்பவுண்ட்’ பட ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட்...!
நீரஜ் கவான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹோம்பவுண்ட்’ என்ற திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. தர்மா புரடக்ஷன் தயாரித்த இப்படத்தில் இந்தப் படத்தில் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்தப் படம் நியூயார்க் டைம்ஸ் கட்டுரையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
வெளியீட்டிற்கு முன் இப்படம், கேள்ஸ் மற்றும் டொராண்டோ உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது. இப்படம் செப்டம்பர் 26 அன்று திரையரங்குகளில் வெளியானது. அதில் கலவையான விமர்சனக்களையே இப்படம் பெற்றது.
இதனிடையே அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவிலிருந்து சர்வதேச திரைப்படப் பிரிவில் ''ஹோம்பவுண்ட்'' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. இப்போது இந்த படம் ஓடிடிக்கு வர தயாராக உள்ளது. அதன்படி, இந்த படம் வருகிற 21 முதல் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளதாக தகவ்ல் வெளியாகியுள்ளது.