For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஐபிஎல் 2024 | பெங்களூரு அணிக்கு 223 ரன்கள் இலக்கு!

05:50 PM Apr 21, 2024 IST | Web Editor
ஐபிஎல் 2024    பெங்களூரு அணிக்கு 223 ரன்கள் இலக்கு
Advertisement

முதலில் ஆடிய கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் சேர்த்து  பெங்களூரு அணிக்கு 223 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 36ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து கேகேஆர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணிக்கு பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர்.

இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பில் சால்ட் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசி 14 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான சுனில் நரைனும் 10 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறக்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிங்கு சின் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் அதிரடியாக விளையாட முயற்சியில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்கள் எடுத்த நிலையில் ரிங்கு சிங் தனது விக்கெட்டை இழந்தார். ஆனலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின் 50 ரன்களில் ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரமந்தீப் சிங் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அவருக்கு துணையாக ஆண்ட்ரே ரஸலும் அதிரடி காட்ட அணியின் ஸ்கோரும் 200 ரன்களைக் கடந்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரமந்தீப் சிங் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 22 ரன்களைச் சேர்த்தார்.

மறுபக்கம் ஆண்ட்ரே ரஸல் 4 பவுண்டரிகளுடன் 27 ரன்களைச் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 6 விக்கெட் இழபிற்கு 222 ரன்களைச் சேர்த்தது. ஆர்சிபி அணி தரப்பில் யாஷ் தயாள், கேமரூன் க்ரீன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி ஆர்சிபி அணி விளையாடவுள்ளது.

Tags :
Advertisement