For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஜார்க்கண்ட், மகாராஷ்டிராவில் இன்று வாக்கு எண்ணிக்கை - ஆட்சியை கைப்பற்றப் போவது யார் ?

06:43 AM Nov 23, 2024 IST | Web Editor
ஜார்க்கண்ட்  மகாராஷ்டிராவில் இன்று வாக்கு எண்ணிக்கை   ஆட்சியை கைப்பற்றப் போவது யார்
Advertisement

ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

Advertisement

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, நவம்பர் 13 ஆம் தேதி முதல் கட்ட வாக்கு பதிவு நடந்தது. அதனைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 37 தொகுதிகளுக்கு 14,218 வாக்குச்சாவடிகளில், நவ.20ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. முதலமைச்சர் ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா, எதிர்க்கட்சி தலைவர் அமர் குமார் ஆகியோர் இன்று தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் போட்டியிட்டனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. அதன்படி 67.74% வாக்குகள் பதிவானது

அதேபோல் 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்திற்கும் ஒரேகட்டமாக நவ.20ம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. முக்கியத் தலைவர்களான முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார், சரத் பவார், உத்தவ் தாக்கரே ஆகியோர் இன்று வாக்களித்தனர். இதேபோல பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான், சல்மான்கான் உள்ளிட்ட நடிகர்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அதன்படி 65.11% வாக்குகள் பதிவாகி உள்ளன.

இந்த நிலையில் இரு மாநிலங்களுக்குமான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் இரு மாநிலங்களிலும் பாஜக தலைமையிலான கூட்டணியே பெரும்பான்மையான இடங்களைப் பெறும் என தெரிவிக்கப்பட்டது. இதேபோல வயநாடு இடைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement