உலகளவில் அசத்தும் iPhone விற்பனை... முதலிடம் பிடித்த ஐபோன் சீரிஸ் எது தெரியுமா?
நடப்பாண்டின் 3ம் காலாண்டில் உலகளவில் விற்பனையான போன்கள் பட்டியலில் ஐபோன் 15 முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.
சர்வதேச அளவில் மிகவும் புகழ் பெற்ற செல்போன் உற்பத்தி நிறுவனம் ஆப்பிள். ஐபோன், லேப்டாப், ஐபேட்ஸ் என கேட்ஜெட் சந்தைகளில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை ஆப்பிள் நிறுவனம் நடத்தி வருகிறது. ஆப்பிள் செல்போன்களை பொறுத்தவரை ஹைடெக் பாதுகாப்பு வசதியோடு, பிரைவசியிலும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை கொண்டது ஆகும். இதனால், ஐபோன்களுக்கு என தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
பெரும்பாலும் விஐபிக்கள், பிரபலங்கள் பலரும் ஆப்பிள் பிராண்ட்களையே பயன்படுத்தி வருவதை காணமுடியும். இந்த நிலையில், நடப்பாண்டின் 3ம் காலாண்டில் உலகளவில் விற்பனையான போன்கள் பட்டியலில், ஐபோன் 15 முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் iPhone 14 முதலிடத்தில் இருந்தது குறிப்படத்தக்கது.
ஆப்பிள் ஐபோன்கள் என்றாலே ஸ்மார்ட்போன்களில் ஒருபடி மேல் தான் என்ற நிலை உள்ளது. காரணம் ஒவ்வொரு முறை புதிய ஐபோன் வெளியாகும் போதும் ஒரு புதிய சிறப்பம்சத்தோடுதான் வெளியாகும். அதன்படி, ஐபோன் 13, ஐபோன் 14 -களை விட தனித்துவமான சிறப்பம்சங்களுடன் ஐபோன் 15 -ஐ ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது. ஐபோன் 15 கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.