For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தென்னாப்பிரிக்காவில் நடந்த நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற முன்னாள் மாணவருக்கு பாராட்டு விழா நடத்திய பள்ளி!

03:43 PM Oct 25, 2023 IST | Student Reporter
தென்னாப்பிரிக்காவில் நடந்த நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற முன்னாள் மாணவருக்கு பாராட்டு விழா நடத்திய பள்ளி
Advertisement

தென்னாப்பிரிக்காவில் சர்வதேச அளவிலான நீச்சல் போட்டியில்  வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்த முன்னாள் மாணவருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

Advertisement

நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த தாமஸ் துரை என்பவரது மகன் ஜோசுவா தாமஸ்.
இவர் சென்னை லயோலா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் ஸ்விம்மிங் பெடரேசன் ஆப் இந்தியா சார்பில் ஹைதராபாத்தில் நடைபெற்ற
நேஷனல் அளவிலான நீச்சல் போட்டியில் 20 வயதினருக்கான பிரிவு போட்டியில்
தமிழ்நாடு சார்பில் பங்கேற்றார்.  இப்போட்டியில் ஜோசுவா தாமஸ் வெற்றி பெற்றார்.

இதனை அடுத்து தென்னாப்பிரிக்கா டர்பன் நகரில் அக்டோபர் 18 முதல் 21 வரையில்
நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றார்.  இதில் 6
வகையான போட்டிகளில் ஜோசுவா தாமஸ் பங்கேற்றார்.  இப்போட்டியில் ரஷ்யா, சீனா,
பிரேசில்,  தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.

இதையும் படியுங்கள்:அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு – தமிழ்நாடு அரசு உத்தரவு

இதில் 4x100 ஃப்ரீஸ்டைல் ரிலே போட்டியிலும், 4x50 ஃப்ரீஸ்டைல் போட்டியிலும்
வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.  வெற்றி பெற்று சாதனை
படைத்த ஜோஸ்வா தாமசுக்கு அவர் படித்த நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் எஸ்.ஏ.வி
பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பாராட்டு விழா நடந்தது.  இதில் பள்ளி
தாளாளர் திவாகரன்,  ஆசிரியர்,  ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட பலர்
கலந்து கொண்டனர்.

Tags :
Advertisement