For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்திய சர்வதேச திரைப்பட விழா: 5 தமிழ் படங்கள் தேர்வு!...

10:11 AM Oct 25, 2023 IST | Web Editor
இந்திய சர்வதேச திரைப்பட விழா  5 தமிழ் படங்கள் தேர்வு
Advertisement

அதன்படி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளம், கார்பி ஆகிய மொழிகளை சேர்ந்த படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. இந்த திரைப்பட விழாவில் தமிழில் இருந்து மொத்தம் நான்கு படங்கள் திரையிடப்படவுள்ளன.

இந்திய பனோரமாவில் தேர்வு செய்யப்பட்ட 25 படங்களில் வெற்றிமாறனின் விடுதலை, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கிய காதல் என்பது பொதுவுடைமை, சம்யுக்தா விஜயன் இயக்கிய நீள நிற சூரியன் ஆகிய படங்கள் இடம்பிடித்துள்ளன.

அதேபோல் மெயின்ஸ்ட்ரீம் சினிமா பிரிவில் தேர்வாகியுள்ள 5 படங்களில், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரையிடப்படவுள்ளது. அத்துடன்,  தமிழ் திரைப்படங்களில் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனின், ' காதல் என்பது பொது உடைமை', சம்யுக்தா விஜயனின் 'நீல நிற சூரியன்', வெற்றி மாறனின் விடுதலை பகுதி-1 ஆகிய 4 படங்களும் இடம்பிடித்துள்ளன

இந்த லிஸ்டில், சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியாகி நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பிய தி கேரளா ஸ்டோரி படமும் இடம்பிடித்துள்ளது.

இது தவிர 20, சினிமா அல்லாத திரைப்படங்கள் திரையிடுவதற்கு தேர்வாகியுள்ளன. இதில் பிரவீண் செல்வம் இயக்கிய நன்செய் நிலம், எட்மோண்ச் ரான்சன் இயக்கத்தில் இந்தி, தமிழ், அஸ்ஸாம், வங்காளம், ஆங்கில மொழிகளில் வெளியான லைஃப் இன் லூம் ஆகிய படங்கள் திரையிடப்படவுள்ளன. கன்னடத்தில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்த கந்தாரா திரைப்படமும் கோவா சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்படவுள்ளன.

Advertisement