Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் : எடப்பாடி பழனிசாமி வாழ்த்து...!

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
12:17 PM Dec 03, 2025 IST | Web Editor
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisement

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், கண்ணியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துதல் மற்றும் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார வாழ்வில் அவர்களின் உள்ளடக்கம் குறித்த விழிப்புணர்வை அதிகரித்தல் ஆகியவை இன்றைய தினத்தின் நோக்கமாகும்.

Advertisement

இதையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

“தளராத தன்னம்பிக்கையின் அடையாளமாய், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, சோதனைகள் அனைத்தையும் சாதனைகளாக மாற்றும் வல்லமை பெற்ற தன்னம்பிக்கை நாயகர்களான மாற்றுத்திறனாளி சகோதர–சகோதரிகள் அனைவருக்கும், உலக மாற்றுத்திறனாளிகள் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்”

என்று தெரிவித்துள்ளார்.

Tags :
ADMKEPSInternational Day of Persons with DisabilitieslatestNewsTNnews
Advertisement
Next Article