For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு - அறிவிப்பு இல்லாததால் வாகன ஓட்டிகள் ஏமாற்றம்!

02:02 PM Feb 01, 2024 IST | Web Editor
பெட்ரோல் டீசல் விலை குறைப்பு   அறிவிப்பு இல்லாததால் வாகன ஓட்டிகள் ஏமாற்றம்
Advertisement

2024 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது இடைக்கால பட்ஜெட்டில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்து எந்த அறிவிப்பு வெளியாகாததால் வாகன ஓட்டிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Advertisement

மக்களவை தேர்தல் இந்தாண்டு நடைபெற உள்ள நிலையில்,  அதற்கான தேதி மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.  இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களவைத்  தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன.  இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.  இதையடுத்து இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.

கடந்த 2019-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றார். இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் என்ற பெருமையை பெற்ற இவர், இதுவரை 5 முறை முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து 6-வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையுமா என எதிர்பார்க்கப்பட்டது.  சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினம்தோறும் நிர்ணயிக்கப்படும். இந்த நடைமுறையைத்தான் எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.‘சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.   ‘கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தும் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாததால், எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 6 மாதங்களில் ரூ. 1.32 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளதாகவும் இதனால் சாமானிய மக்கள் மீது சுமை திணிக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

பெட்ரோல் டீசல் விலை உச்ச அளவாக கடந்த 22 மாதங்களாக எந்த மாற்றமின்றி நீடித்து வருகிறது.  இந்த நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பட்ஜெட் உரையில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.  இதனால் வாகன ஓட்டிகள் ஏமாற்றமடைந்தனர்.

Tags :
Advertisement