For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தீவிரமடையும் மிக் ஜாம் புயல் - சாலையில் முதலை தென்பட்டதால் பொதுமக்கள் அச்சம்.!

09:12 AM Dec 04, 2023 IST | Web Editor
தீவிரமடையும் மிக் ஜாம் புயல்   சாலையில் முதலை தென்பட்டதால் பொதுமக்கள் அச்சம்
Advertisement

தீவிரமடையும் மிக் ஜாம் புயலால் அதிகமாக நீர் தேங்கியுள்ள நிலையில் சாலையில் முதலை தென்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Advertisement

சென்னையிலிருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் மிக்ஜம் புயல் மையம் கொண்டுள்ளதாகக் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் சென்னை அருகே வரும் மிக்ஜம் புயல் கரைக்கு இணையாக வடக்கு நோக்கி நகரும் எனவும், நாளை நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு அருகே 150 கிலோ மீட்டர் முதல் 175 கிலோ மீட்டர் வரை மிக்ஜம் புயல் வீச வாய்ப்பு உள்ளதாகவும், வட தமிழகத்தை நோக்கி 14 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்கிறது எனவும் எக்ஸ் தளத்தில் சென்னை வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னை வளரசவாக்கத்தில் 17.1 சென்டி மீட்டரும், காட்டுப்பாக்கத்தில் 14.5 சென்டி மீட்டரும் அளவும் மழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்து வரும் மழைக்கு நடுவே, பெருங்களத்தூர்- நெடுங்குன்றம் சாலையில் உள்ள வேலம்மாள் பள்ளி அருகே முதலை ஒன்று சாலையை கடக்கும் காட்சி வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மழைக்காலத்தில் இதுபோன்ற ஆபத்தான விலங்குகள் தண்ணீரில் இருந்து வெளியே வருவதால் மக்கள் எச்சரிக்கையோடு  இருக்க வேண்டும் என்று அரசு எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..

”கனமழை பெய்து வருவதால் நீர் தேங்கியுள்ள பகுதியில்  முதலை தென்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.   இவை கூச்ச சுபாவமுள்ள விலங்குகள் மற்றும் மனித தொடர்பைத் தவிர்க்கக் கூடிய ஒன்று . எனவே  மழை காரணமாக நீர் பெருக்கெடுத்துள்ளதால், நீர்நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம். இந்த விலங்குகளை தனியாக விட்டுவிட்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும். மனிதர்களினால் இவை தூண்டப்படாமல் இருந்தால், மனிதர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட வாய்ப்பில்லை. பீதியடைய தேவையில்லை. வனவிலங்கு பிரிவு உஷார்படுத்தப்பட்டு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்”

Tags :
Advertisement