For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"அமீரை அவமதிப்பது எங்களை போன்ற படைப்பாளிகளை அவமதிப்பதற்கு சமம்" - ஞானவேல் ராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம்.!

06:55 PM Nov 28, 2023 IST | Web Editor
 அமீரை அவமதிப்பது எங்களை போன்ற படைப்பாளிகளை அவமதிப்பதற்கு சமம்    ஞானவேல் ராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம்
Advertisement

"அமீரை அவமதிப்பது எங்களை போன்ற படைப்பாளிகளை அவமதிப்பதற்கு சமம்" என  ஞானவேல் ராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம்  தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisement

பருத்திவீரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அத்திரைப்படத்தை இயக்கிய அமீர் தன்னை ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இது சமூக வலைதள பக்கங்களில் பேசுபொருளானது.

இதற்கு மறுப்பு தெரிவித்து இயக்குநர் அமீர் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், பருத்திவீரன் திரைப்படம் உருவாக பண உதவியளித்த இயக்குநர் சசிகுமாரும் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.  இதனைத் தொடர்ந்து இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி, இயக்குநர் கரு.பழனியப்பன், கவிஞர் சினேகன் உள்ளிட்டோர் அமீருக்கு ஆதரவாக  குரல் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் இது தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது..

” ஞானவேலின் காணொலியை பார்க்க நேரிட்டது. பருத்திவீரன் திரைப்படம் சார்ந்து உங்களுக்குள் இருப்பது பொருளாதர பிரச்சனை சார்ந்தது மட்டுமே. ஆனால் நீங்கள் தந்த பேட்டியில் மிகச்சிறந்த படைப்பாளியின் புகழுக்கும், பெயருக்கும். படைப்பிற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கதக்கதாகும்.

உங்களை திரைத்துறையில் அடையாளப்படுத்தி, மிகப்பெரும் தயாரிப்பாளராக உருவாக்கியதில் அமீரின் பங்களிப்பு மிகப்பெரியது என்பதை மறந்துவிடவேண்டாம். பருத்திவீரன் திரைப்படத்திற்கு முன்பு அமீர் இரண்டுபடம் இயக்கி,அதில் ஒன்றைத் தயாரித்தும் இருக்கிறார். அவர் உங்கள் படத்தில் தான் வேலை கற்றுக் கொண்டார் என்பதை எக்காளமாக கூறி வன்மமாக சிரிப்பது என்போன்ற படைப்பாளிகளையும் அவமதிக்கும் செயலாகும்..!

ஏனென்றால் உண்மையான படைப்பாளிகள் சாகும் அவரை கற்றுக்கொண்டேதான் இருப்பார்கள்..! நான் இப்போதும் கற்றுக்கொண்டு தான் இருக்கிறேன்..! மிகச் சிறந்த படைப்பாளியின் படைப்புகளையும்,அவர் நேர்மையையும் இழிவுபடுத்தியதற்காக வருத்தம் தெரிவித்து, பிரச்சினையை சுமூகமாக பேசி தீர்ப்பதே சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.” என பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement