For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பாஜகவிடம் 4 மக்களவை, 1 மாநிலங்களவை தொகுதிகளை கேட்கவில்லை" - தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

03:23 PM Mar 02, 2024 IST | Web Editor
“பாஜகவிடம் 4 மக்களவை  1 மாநிலங்களவை தொகுதிகளை கேட்கவில்லை    தமாகா தலைவர் ஜி கே வாசன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி
Advertisement

பாஜகவிடம் 4 மக்களவை, 1 மாநிலங்களவை தொகுதிகளை கேட்பதாக வந்த தகவல் 100/100 சதவிகிதம் பொய் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக கூறியுள்ளார். 

Advertisement

பாஜக மக்களவைத் தேர்தல் பேச்சுவார்த்தை குழு இன்று தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசனை எம்பியை இன்று சந்தித்து பேசியது.  இந்நிலையில்,  தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.  அப்போது, நாடாளுமன்ற தேர்தல் குறித்து எமது செய்தியாளர் நந்தா நாகராஜன் பல்வேறு கேள்விகளை முன் வைத்தார்.  இதற்கு ஜி.கே.வாசன் அளித்த பதில்களை பார்க்கலாம்.

கேள்வி: முந்தைய தேர்தல்களில் அதிமுக உடனான கூட்டணியில் நின்றதால் தான் தமாகா வாக்கு பெற்றது எனவும்,  தற்போது கூட்டணியில் இருந்து வெளியேறி துரோகம் செய்து விட்டதாக,  அதிமுக நிர்வாகிகள் கூறுவதாக வந்த தகவல் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: 2019 இல் பாஜக,  அதிமுக,  தமாகா கூட்டணி ஒற்றைக் கருத்தோடு நின்றது,  அந்த ஒற்றை கருத்தில் தான் இந்த தேர்தலையும் பாஜகவும்,  தமாகாவும் எதிர்கொள்கிறது.

கேள்வி:  அதிமுக உடனான கூட்டணியை தவிர்த்து தற்போது பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளீர்கள்,  ஆனால் இந்த கூட்டணி வலுவானதாக இல்லை என அதிமுக தரப்பில் கூறப்படுகிறதே?

பதில்:  திமுக கூட்டணி தவிர வேறு எந்த கட்சிக்கும் கூட்டணி உறுதி செய்யப்படவில்லை. இன்னும் கூட்டணியில் சேராத கட்சிகளுக்கு எல்லாம் கால அவகாசம் கிடைக்கும் போது, பாஜக கூட்டணியில் சேர விருப்பம் காட்டுவர்

கேள்வி: பாஜகவிடம் தமாகா 4 மக்களவை, 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டுள்ளதாக வெளிவந்த தகவல் குறித்து உங்கள் கருத்து?

பதில்: 4 மக்களவை, 1 மாநிலங்களவை தொகுதிகளை நாங்கள் பாஜகவிடம் கேட்பதாக வந்த தகவல் 100/100 சதவிகிதம் பொய்.  இந்த கூட்டத்தில் தொகுதியை பற்றியோ,  கூட்டணி பற்றியோ தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பேசவில்லை.  கூட்டணி குறித்த குழு அமைக்கப்படும்.  அந்த குழு கூட்டணி குறித்து ஆலோசனை செய்யும்.  அந்த கூட்டணி குழுவே யார் யார்,  எந்தெந்த இடத்தில் போட்டியிடுவது என்பதை தீர்மானிக்கும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் பிரத்யேக பேட்டியை பார்க்க....

Tags :
Advertisement