"பாஜக, அமித்ஷா பின் விஜய் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது" - சட்டப்பேரவை தலைவர் அப்பாவு!
"உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தை தமிழக முதலமைச்சர் சிதம்பரத்தில் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் நெல்லை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட நிலை டவுன் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவும் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. நெல்லை மாநகர பகுதியில் 13 துறை சார்ந்த அதிகாரிகள் நடந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, "உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் தமிழகம் முழுதும் 10 ஆயிரம் இடங்களில் நடத்திட தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். முகாமில் அளிக்கப்படும் மனுக்கள்
மீது 45 நாட்களில் தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் இந்த முகாம் 255 இடங்களில் நடைபெற உள்ளது.
அக்டோபர் 7 வரை இந்த முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 1295 தன்னார்வலர்கள் இந்த முகாமுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க 4 மையங்கள் ஒவ்வொரு முகாமிலும் செயல்ப்படுத்தப்படுகிறது. இப்போது விண்ணப்பம் வழங்குபவர்கள் தகுதியானவர்களாக இருந்தால் அவர்கள் இந்த திட்டத்தில் இணைத்து கொள்ளபடுவார்கள். மராட்டிய மாநில ஆளுனர் ராதாகிருஷ்ணன் போல ஒரு ஆளுனர் இருந்தால் எந்த பிரச்சனையும் வராது.
தமிழ்நாடு ஆளுனர் தமிழக சுகாதரதுறையை பாராட்டி உண்மையை சொல்லியுள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள். இதனை ஆளுநர் இவ்வளவு நாள் ஆகிவிட்டது சிறப்பாக செயல்படுவதால் தான் பொருளாதாரத்தில் தமிழகம் ஒன்பது சதவீதம் நாட்டில் முன்னிலையில் உள்ளது. காவிக்கு பின்னால் இந்த முதல்வர் ஒழிவதற்கு அவசியம் இல்லை. சாத்தான்குளம் சம்பவத்தில் வழக்கு பதிவு செய்யவே அப்போதே அரசு தயங்கியது ஆனால் இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மெஜிஸ்ட்ரேட் விசாரணை நடந்து வருகிறது. சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்தது யார் என்பதே ஆர்ப்பாட்டத்தில் பேசிய அந்த அரசியல் கட்சி தலைவருக்கு தெரியவில்லை.
இவர் எப்படி வசனம் எழுதி கொடுத்து வாசிக்கிறார் என்பது புரியவில்லை. விஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை சரியா தவறா என்பதை இதுவரை தெரியவில்லை. அவரது வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடந்த போது பாண்டிச்சேரியை சேர்ந்த புஸ்சி ஆனந்த் நேரில் சென்று அமித்ஷாவிடம் பேசி அதனை சரி செய்து வைத்தார். வருமான வரி சோதனை நடத்திய அதிகாரி அருண்ராஜுக்கு பதவி வழங்கப்படுகின்றது.
வருமான வரி சோதனையை சரிசெய்த புஸ்சி ஆனந்திற்கு பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்படுகிறது. யார் சொல்லி இந்த போராட்டம் நடத்தினார் என்பது தெரியவில்லை. பாஜக அமித்ஷா பின்னால் விஜய் இருப்பதாக பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்று வருகிறது. விஜயின் தாயார் சிறுபான்மையினர் பிரிவை சேர்ந்தவர் என்பதால் சிறுபான்மை வாக்குகளை பிரிப்பதற்காக அவரை களத்தில் இறக்கி உள்ளதாக தோன்றுகிறது" என தெரிவித்துள்ளார்.