For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

போரால் பாதிக்கப்பட்டுள்ள காசாவில் தொற்று நோய் பரவுகிறது -ஐ.நா கவலை

07:22 AM Nov 06, 2023 IST | Web Editor
போரால் பாதிக்கப்பட்டுள்ள காசாவில் தொற்று நோய் பரவுகிறது  ஐ நா கவலை
Advertisement

போரால் பாதிக்கப்பட்டுள்ள காசாவில் தொற்று நோய் பரவி வருவதாக பாலஸ்தீன விவகாரங்களுக்கான ஐ.நா நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

Advertisement

கடந்த மாதம் 7-ந் தேதி இஸ்ரேல் மீது மாஸ் அமைப்பினர் கொடூர தாக்குதலை அரங்கேற்றினர். சுமார் 20 நிமிடத்தில் இஸ்ரேல் மீது 5 ஆயிரத்துக்கும் அதிகமான ராக்கெட் குண்டுகளை வீசிய ரமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் எல்லையோர நகரங்களுக்குள் ஊடுருவி கண்ணில்பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொன்றனர்.

இதில் 1,400 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பெண்கள். சிறுவர்கள் உள்பட சுமார் 250 பேரை வரமாஸ் அமைப்பினர் பிணை கைதிகளாக பிடித்து காசா பகுதிக்கு கொண்டு சென்றனர். இதை தொடர்ந்து, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. ஊரமாஸ் அமைப்பை ஒட்டுமொத்தமாக ஒழிப்போம் என்ற சபதத்துடன் இஸ்ரேல் போரை தொடர்ந்து வருகிறது. உலக நாடுகளை கவலையடைய செய்துள்ள இந்த போர் 1 மாதத்தை எட்டியுள்ளது.

இந்த போரில் காசாவில் மட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அங்கு இதுவரை 9,500-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இவர்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் சிறுவர்கள் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், போரால் பாதிக்கப்பட்டுள்ள காசாவில் தொற்று நோய் பரவி வருவதாக பாலஸ்தீன விவகாரங்களுக்கான ஐ.நா நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

Advertisement