For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#INDvsENG | இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 - இந்திய அணிக்கு 166 ரன்கள் இலக்கு!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 166 ரன்களை இலக்காக இங்கிலாந்து அணி நிர்ணயித்ததுள்ளது.
09:04 PM Jan 25, 2025 IST | Web Editor
 indvseng   இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20    இந்திய அணிக்கு 166 ரன்கள் இலக்கு
Advertisement

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அணி அபார வெற்றி பெற்றது

Advertisement

தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஜன.25) நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்ததது. பின்பு இங்கிலாந்து அணி தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஃபில் சால்ட் பென் டக்கெட் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

அதன் பின்பு களத்திற்கு வந்த ஜோஸ் பட்லர் சிறப்பான முறையில் விளையாடி45 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்த களமிறங்கிய ஹாரி புரூக் 13 ரன்களும், லியாம் லிவிங்ஸ்டன் 13 ரன்களும், ஜேமி ஸ்மித் 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 165 ரன்கள் எடுத்துது இந்திய அணிக்கு 166 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணியில் அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தங்களது சுழலில் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

Tags :
Advertisement