#Paralympics2024 - வட்டு எறிதலில் வெள்ளி வென்றார் இந்திய வீரர் யோகேஷ் கதுனியா!
பாரீஸ் பாராலிம்பிஸ் விளையாட்டு தொடரில் இந்திய வீரர் யோகேஷ் கதுனியா வெள்ளி பதக்கம் வென்றார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 17-வது பாராலிம்பிக் தொடர் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் செப்.8ஆம் தேதி வரை என மொத்தம் 11 நாட்கள் நடைபெறுகின்றன. பாராலிம்பிக்ஸில் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
17-வது பாராலிம்பிக் தொடரின் பதக்கப்பட்டியலில் சீனா 33 தங்கம் உள்பட 71 பதக்கத்துடன் முதலிடம் வகிக்கிறது. இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கத்துடன் 27-வது இடத்தில் உள்ளது.
இதையும் படியுங்கள் : TNPSC குரூப்1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு!
இந்நிலையில், ஆண்களுக்கான F56 பிரிவில் இந்திய வட்டு எறிதல் வீரர் யோகேஷ் கதுனியா வெள்ளிப் பதக்கம் வென்றார். யோகேஷ் கதுனியா 42.22 மீட்டர் தூரத்திற்கு வட்டு எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். முன்னதாக டோக்கியோ பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரிலும் யோகேஷ் கதுனியா வெள்ளிப் பதக்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு இது 8வது பதக்கம் ஆகும்.