இந்தியாவின் முதல் 'ஜென் பீட்டா' குழந்தை!
இந்தியாவின் முதல் ஜென் பீட்டா தலைமுறை குழந்தை ஜன.1 அன்று மிசோரமில் பிறந்தது.
2025 ஜனவரி ஒன்று அதிகாலை 12 மணிக்கு பிறகு பிறக்கும் அனைத்து குழந்தைகளும் ஜென் பீட்டா தலைமுறை என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஜென் பீட்டா உலகின் 7 ஆவது தலைமுறையாகும். தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, பன்முகத்தன்மையின் சிறப்பான பங்களிப்பு, இந்த தலைமுறைக்கு கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இந்நிலையில் இந்தியாவின் முதல் ஜென் பீட்டா தலைமுறை குழந்தை ஜன.1 அன்று மிசோரமில் பிறந்துள்ளது. ஐஸ்வாலில் உள்ள டர்ட்லாங்க்ஸ் சினோட் மருத்துவமனையில் பிறந்த ‘ஃபிரான்கி ரெம்ருதிகா ஸடெங்தான்’ ஜென் பீட்டா தலைமுறையின் முதல் குழந்தை ஆவார். 3.12 கிலோ எடையுடன் இவர் ஜனவரி 1ஆம் தேதி அதிகாலை 12:03 மணிக்கு பிறந்தார்.
2025 மற்றும் 2039க்கு இடையில் பிறக்கும் குழந்தைகளை வரையறுக்க 'ஜென் பீட்டா' என்ற சொல்லை ஃபியூச்சரிஸ்ட் மார்க் மெக்ரிண்டில் உருவாக்கினார். 2035 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் இந்த ஜென் பீட்டா தலைமுறையினர் 16 சதவீதமாக இருப்பர் எனவும் கூறியுள்ளார்.