For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ... கவனம் பெறும் #MahaKali ஃபர்ஸ்ட் லுக்!

08:59 PM Oct 10, 2024 IST | Web Editor
இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ    கவனம் பெறும்  mahakali ஃபர்ஸ்ட் லுக்
Advertisement

இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ ‘மகாகாளி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்-லுக் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

Advertisement

பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் ‘ஹனுமான்’. இத்திரைப்படத்தை பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரித்திருந்தது. இத்திரைப்படத்தில் அம்ரிதா ஐயர், வினய் ராய், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

‘ஹனுமான்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானீஸ் உள்ளிட்ட உலக மொழிகளிலும், பான்- வேர்ல்ட் திரைப்படமாக வெளியானது. இத்திரைப்படத்தை பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸ் (பிவிசியு) ஆக உருவாக்கினார்.

இதனையடுத்து, சினிமாட்டிக் யுனிவர்சில் அடுத்த திரைப்படத்தை உருவாக்குவதாக பிரசாந்த் வர்மா அறிவித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு மகாகாளி என பெயரிடப்பட்டுள்ளது. மகாகாளி திரைப்படத்திற்கு பிரஷாந்த் வர்மா கதை எழுதியுள்ள நிலையில், பூஜா அபர்ணா கொல்லுரு திரைப்படத்தை இயக்குகிறார்.

இது இந்தியாவின் முதல் பெண் சூப்பர்ஹீரோ படமாக உருவாகுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு சமரன் சாய் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கவனம் பெற்றுள்ளது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement