Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

2026-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை தொடங்கும் - மத்திய அமைச்சர்!

04:38 PM Feb 25, 2024 IST | Web Editor
Advertisement

2026-ம் ஆண்டு ஜூலை - ஆகஸ்டு மாதத்துக்குள் பணிகளை முடித்து அங்கு புல்லட் ரயில் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement

நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டப்பணிகள் மும்பை - அகமதாபாத் இடையே நடந்து வருகின்றன. ரூ.1.08 லட்சம் கோடி செலவில் நடந்து வரும் புல்லட் ரயில் திட்டப்பணிகளை மும்பையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“மும்பை - அகமதாபாத் இடையே 508 கி.மீ. நீளத்தில் புல்லட் ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதில் சூரத் - பிலிமோரா இடையே 2026-ம் ஆண்டு ஜூலை - ஆகஸ்ட் மாதத்துக்குள் பணிகளை முடித்து அங்கு புல்லட் ரயில் இயக்கப்படும். பின்னர் ஒவ்வொரு பகுதிகளாக புல்லட் ரயில் சேவை நீட்டிக்கப்படும்.

மும்பை - அகமதாபாத் இடையே மொத்தம் 12 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் நின்று செல்லும் ரயில், எல்லா இடங்களிலும் நின்று செல்லும் ரயில் என இரு சேவைகள் இயக்கப்படும். குறைந்த இடங்களில் நிற்கும் புல்லட் ரயில் 2 மணி நேரத்தில் சென்றுவிடும். எல்லா இடங்களிலும் நிற்கும் ரயில் மும்பையில் இருந்து ஆமதாபாத் செல்ல 2.45 மணி நேரம் எடுத்து கொள்ளும்.

முந்தைய உத்தவ் தாக்கரே அரசு எல்லா அனுமதியையும் விரைவாக கொடுத்து இருந்தால் இப்போது அதிக பணிகள் முடிந்து இருக்கும். ஏக்நாத் ஷிண்டே ஆட்சிக்கு வந்த பின்னர் புல்லட் ரயில் திட்ட பணிகள் வேகம் அடைந்தது" என்று அவர் கூறினார்.

Tags :
#ahmedabadAshwini VaishnawBJPBullet TrainGujaratIndiaMumbaiNarendra modiNews7Tamilnews7TamilUpdatesPMO IndiaSabarmatiTerminal
Advertisement
Next Article