"இந்தியாவின் பாதுகாப்புத்துறை வேகமாக வளர்ந்து வருகிறது" - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், "இந்தியாவை ஒரு வலிமையான நாடாக மாற்றவும், உலகளாவிய அந்தஸ்தை உயர்த்தவும். வறுமை மற்றும் வேலையின்மையை தீர்க்கவும் விரும்பினால். நாம் உள்நாட்டு உற்பத்தியின் பாதையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நாட்டின் பொருளாதாரத்தை வர்த்தகம் இல்லாமல் வலுப்படுத்த முடியாது. நாட்டில் பொதுமக்கள் பணத்தை செலவு செய்யாமல் இருப்பு வைத்திருக்கும் நிலையில் பொருளாதாரத்திற்குத் தேவையான வேகத்தை நம்மால் எட்ட முடியாது. வணிகம் நின்றுவிட்டால், முழு பொருளாதார அமைப்பும் பாதிக்கப்படும். எனவே, வர்த்தகம் தொடர்ந்து நடைபெற வேண்டும்.
இந்தியாவின் பாதுகாப்புத் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் ராணுவ உபகரணங்களின் இறக்குமதி மற்றும் பரிவர்த்தனைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. அதேபோல், சிறிய பொருட்கள் கூட வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், நான் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியேற்றபோது மொத்த உற்பத்தி சுமார் ரூ.45,000 முதல் 46,000 கோடியாக இருந்தது. இந்த நிலையில், நம் நாட்டில் உற்பத்தி கிட்டத்தட்ட ரூ.1.5 லட்சம் கோடியை தொட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.