”மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதே இந்தியாவின் எதிரி” - பிரதமர் மோடி பேச்சு!
பிரதமர் மோடி இன்று குஜராத்தின் பாவ்நகரில் ரூ.34,200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பேசிய அவர்,
"உலக அரங்கில் சகோதரத்துவ உணர்வோடு இந்தியா முன்னேறி வருகிறது. இன்று உலகில் இந்தியாவுக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை. ஆனால் உண்மையில், இந்தியாவின் மிகப்பெரிய எதிரி மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதுதான். இந்த சார்புநிலையை கூட்டாக தோற்கடிக்க வேண்டும். அதிக வெளிநாட்டு சார்புநிலை தோல்விக்கு வழிவகுக்கும். மற்றவர்களை நம்பியிருப்பது தேசிய சுயமரியாதையை சமரசம் செய்கிறது. 140 கோடி இந்தியர்களின் எதிர்காலத்தை வெளிப்புற சக்திகளிடம் விட்டுவிட முடியாது. தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவது ஒன்றுதான் இப்பிரச்சினைகளுகான தீர்வு.
இந்தியாவில் ஒருபோதும் திறமைக்குக் குறைவில்லை. சுதந்திரத்திற்குப் பிறகு, அப்போதைய ஆளும் கட்சி (காங்கிரஸ்) நாட்டின் ஆற்றலை தொடர்ந்து புறக்கணித்தது. இதன் விளைவாக, ஆறு முதல் ஏழு தசாப்த கால சுதந்திரத்திற்குப் பிறகும், இந்தியா தகுதியான வெற்றியை அடைய முடியவில்லை” என்றார்.