2023-ம் ஆண்டில் இந்தியா படைத்த சாதனைகள்!
2023ம் ஆண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு இந்தியா படைத்துள்ள சாதனைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
2023 ஆண்டு இன்னும் ஒரிரு தினங்களில் முடிவுக்கு வருகிறது. பல முக்கிய நிகழ்வுகளை இந்த ஆண்டு மக்கள் சந்தித்துள்ளனர். அரசியல், சினிமா , பொருளாதாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்த முக்கிய நிகழ்வுகள் இந்த ஆண்டு ஏராளமாக நடந்துள்ளன. அந்த வகையில் 2023-ம் ஆண்டு இந்தியா பல சாதனைகளை படைத்துள்ளது. அவை குறித்து விரிவாக காணலாம்.
சந்திராயன்-3
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து கடந்த ஜுலை 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அடுத்தடுத்து வெற்றி படிகளை சந்திரயான் 3 கடந்த நிலையில், கடந்த 23ம் தேதி மாலை விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த உலகின் கவனமும் இந்தியாவின் பக்கம் திரும்பியது.
இஸ்ரோவின் இந்த மாபெரும் சரித்திர சாதனைக்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், கத்தார் உள்பட பல்வேறு நாடுகள் வாழ்த்து தெரிவித்தன. சந்திரயான் -3 விண்கலம் நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற அடையாளத்தை அடைய உதவியது.
உலகின் மிகப்பெரிய தியான மையம்
வாராணசியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள உமரஹா பகுதியில் அமைந்துள்ள இந்த மகாமந்திர் 3,00,000 சதுர அடியில் பரந்து விரிந்துள்ளது. ஏழு தளங்களைக் கொண்ட ஸ்வர்வேத மகாமந்திர் 125 இதழ்கள் கொண்ட தாமரை குவிமாடங்கள் மற்றும் பிரமிக்கவைக்கும் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய தியான மையங்களில் ஒன்றாகும்.
உலகின் நீளமான சொகுசு கப்பல்
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘எம்.வி. கங்கா விலாஸ்' என்கிற தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த சொகுசு கப்பல், நதி வழியாக இயக்கப்படும் உலகின் நீளமான சொகுசு கப்பல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்தக் கப்பல் தனது முதல் பயணத்தை கடந்த ஜனவரி மாதம் 13-ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் தொடங்கியது.
இது புத்தகயா, விக்ரம் ஷிலா, சுந்தரவனக்காடுகள், காஜிரங்கா தேசியப்பூங்கா, வங்கதேசத்தின் டாக்கா வழியாக அசாமில் உள்ள திப்ருகரில் பயணத்தை முடிக்கும்வகையில் தொடங்கி வைக்கப்பட்டது.
இதன்படி இந்த சொகுசு கப்பல் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்து அசாம் மாநிலம் திப்ருகருக்கு வந்தடைந்தது. இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் உள்ள 27 நதி அமைப்புகளின் வழியாக 50 நாட்களுக்கும் மேலாக, உலகின் ஒரே ஒரு நதிக் கப்பலின் மூலம் மிக நீண்ட நதிப் பயணத்தை மேற்கொண்டது.
யோகா
யோகா அமர்வு 147,952 பேரின் பங்கேற்பைக் கண்டு ஒரு யோகா பாடம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது. இந்த அமர்வு 21 ஜூன் 2023 அன்று இந்தியாவின் குஜராத்தின் சூரத்தில் நடைபெற்றது.
5ஜி
உலகிலேயே அதிவேக 5ஜி வெளியீடு இந்தியாவிலும் இருந்தது. இந்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு நிமிடமும் ஒரு தளம் நிறுவப்படுகிறது.
விமான ஒப்பந்தம்
இந்தியாவில் அதிகரித்துவரும் விமான வணிக சந்தையில் ஏர் இந்தியா நிறுவனம் தன்னுடைய வலுவான இருப்பை மீண்டும் தக்க வைப்பதற்கான முயற்சியாக இந்த ஒப்பந்தம் உள்ளது.
உலகின் மிகப்பெரிய விமான ஒப்பந்தம் ஏர் இந்தியா 470 விமானங்களுக்கு ஆர்டர் செய்தது. அ70 பில்லியன் டாலர் மதிப்புள்ள உலகின் மிகப்பெரிய விமான கொள்முதல் இதுவாகும்.அ ஐரோப்பிய விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் மற்றும் அமெரிக்க ராட்சத போயிங்கிடம் இருந்து கொள்முதல் செய்கிறது இந்தியா.
பொருளாதாரம்
உலகின் வேகமாக வளரும் பொருளாதாரம் உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா 5-வது இடத்தைப் பிடித்தது. 2023 நிதியாண்டின் தொடக்க காலாண்டில், இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.8 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா 2-வது இடத்திலும் இருக்கிறது. ஜப்பான் 3-வது இடத்திலும், ஜெர்மனி 4-வது இடத்திலும் இருக்கின்றன. இந்தியா தற்போது 5-வது இடத்தில் இருக்கிறது.
சூரத் வைர பங்குச்சந்தை
இந்தியாவின் வைரத் தொழில் தலைநகரமாக குஜராத்தின் சூரத் நகரம் திகழ்கிறது. உலகின் 90 சதவீத வைரங்கள் இங்கு பட்டை தீட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இங்கு வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல் மற்றும் வியாபாரத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து செயல்படும்விதத்தில் 'சூரத் வைர பங்குச்சந்தை' என்ற பெரிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
சூரத் வைர நகரில், 35 ஏக்கர் நிலப்பரப்பில், தலா 15 மாடிகளை கொண்ட 9 செவ்வக வடிவ அமைப்புகளாக இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களை இணைக்கும் முதுகெலும்பு போல ஒரு மைய கட்டிடம் அமைந்திருக்கிறது. சூரத் டயமண்ட் போர்ஸ், கின்னஸ் உலக சாதனையின் படி, 659,611 சதுர மீட்டர் (7,099,993.71 சதுர அடி) ஆகும்.
தீபோத்சவ்
அயோத்தியில் தீபோத்சவ் திருவிழாவில் 22 லட்சம் தீபங்கள் ஏற்றி சாதனை படைக்கப்பட்டது. உபியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜ ஆட்சி அமைந்த பின்னர் அயோத்தியில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை அன்று தீபோத்சவ் என்ற பெயரில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு தீபோத்சவ் விழாவையொட்டி அயோத்தியில் கலாசார ஊர்வலம் நடந்தது. இந்த ஆண்டு 22 லட்சம் தீபங்கள் ஏற்றி உலக சாதனை படைக்கப்பட்டது.