Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“லெபனானை விட்டு இந்தியர்கள் வெளியேற வேண்டும்!” - மத்திய அரசு உத்தரவு!

09:31 PM Aug 01, 2024 IST | Web Editor
Advertisement

லெபானானில் பதற்றமான சூழல் நிலவியுள்ளதால் அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில் லெபனானில் உள்ள இந்தியர்கள், அங்கிருந்து வெளியேற வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே மற்றும் ராணுவ தளபதி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் நிலவும் பதட்டமான சூழ்நிலை காரணமாக லெபனானில் உள்ள இந்திய தூதரகம் இந்த அறிவுறுத்தலை  கொடுத்துள்ளது.

இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

"இந்த பிராந்தியத்தில் தற்போது அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை இந்திய குடிமக்கள், லெபனானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதோடு, லெபனானில் உள்ள இந்திய குடிமக்கள் அனைவரும் லெபனானை விட்டு வெளியேறுமாறு கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஏதேனும் ஒரு காரணத்துக்காக லெபனானில் தங்கியிருப்பவர்கள் தீவிர எச்சரிக்கையுடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள cons.beirut@mea.gov.in என்ற இமெயில் முகவரியும், 96176860128 என்ற அவசர தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Tags :
Central governmentIndian EmbassyIranIsraelLebanon
Advertisement
Next Article