நேபாள இடைக்கால பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி உரையாடல்!
இந்திய பிரதமர் மோடி நேபாளத்தின் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றுள்ள சுஷிலா கார்க்கியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்,
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
"நேபாள இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் திருமதி சுஷிலா கார்க்கியுடன் அன்பான உரையாடலை மேற்கொண்டேன். சமீபத்திய துயரகரமான உயிர் இழப்புகளுக்கு மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டேன். அமைதி மற்றும் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான அவரது முயற்சிகளுக்கு இந்தியாவின் உறுதியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினேன். மேலும், நாளை தேசிய தினமான நேபாள மக்களுக்கும் அவருக்கும் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டேன்”
என்று பதிவிட்டுள்ளார்.
சமூக ஊடக தளங்கள் மீதான தடையை தொடர்ந்து கடந்த 8-ம் தேதி நேபாளத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவலர்களின் துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து போராட்டமானது பெரும் கலவரமாக வெடித்தது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் காத்மாண்டுவில் உள்ள நாடாளுமன்றம், தலைமைச் செயலகம், உச்ச நீதிமன்றம், பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர் இல்லங்களை சூறையாடினர். இக்கலவரத்தில் 51 பேர் பலியாகினர். மேலும் 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனிடையே பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகியதால் நேபாளத்தில் ஆட்சி கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து அடுத்து தேர்தல் நடக்கும்வரை அரசை வழிநடத்த இடைக்கால பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி தேர்ந்தெடுக்கப்பட்டார்.