பாரிஸ் ஒலிம்பிக் போட்டி: இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர், வீராங்கனை முன்னேற்றம்!
பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளனர்.
சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரிஸ் நகரில் கடந்த 26ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 11ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது. பாரிஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்த தொடரில் இந்தியா இதுவரை 2 பதக்கங்கள் வென்றுள்ளது. இந்நிலையில், இன்று ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே 590 புள்ளிகள் பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ரைபில் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் 7 வது வீரராக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த இறுதி போட்டி நாளை நடைபெற உள்ளது.
மற்றொரு இந்திய வீரர் ஐஸ்வரி சிங் தோமர் 589 புள்ளிகள் பெற்ற நிலையில், இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்துள்ளார்.
இதையும் படியுங்கள் :கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரகு தாத்தா’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு – இணையத்தில் வைரல்!
பாரீஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா வெற்றி பெற்றார். பாரிஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் அகுலா ஸ்ரீஜா சிங்கப்பூரின் ஷெங் ஜியானை 4-2 என்ற புள்ளி கணக்கில் விழித்தினார். ஸ்ரீஜா அகுலா 2-வது சுற்றிலும் வென்றதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
அதேபோல், மகளிர் குத்துச்சண்டை 75 கிலோ எடைப்பிரிவில் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் நார்வே வீராங்கனை சுனிவா ஹாப்ஸ்டாத்தை 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை லவ்லினா போர்கெயின் காலிறுதிக்குத் தகுதிப்பெற்று அசத்தியுள்ளார்.