டெஸ்ட் கிரிக்கெட் | புதிய மைல்கல்லை எட்டி #ViratKohli சாதனை!
டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ரன்களை கடந்த 4-ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை இந்திய வீரர் விராட் கோலி பெற்றுள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மழையால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தது. தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 402 ரன்கள் குவித்தது. ரச்சின் ரவீந்திரா 134 ரன், கான்வே 91 ரன், டிம் சவுதி 65 ரன் எடுத்தனர். 366 ரன்கள் பின்தங்கிய நிலையில், இந்திய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் 35 ரன்னிலும், ரோகித் சர்மா அரை சதம் அடித்து 52 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இதையும் படியுங்கள் : மகளிர் டி20 உலககோப்பை | இறுதிபோட்டிக்கு முன்னேறிய #NewZealand
இதையடுத்து, விராட் கோலி மற்றும் சர்பராஸ் கான் இருவரும் களமிறங்கி அரைசதம் அடித்து அசத்தினர். 3-ம் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் கோலி 70 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில், 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா தனது 2-வது இன்னிங்சில் 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்துள்ளது. சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் உள்ளார்.
இந்நிலையில், இந்தப் போட்டியில் விராட் கோலி 53 ரன்கள் எடுத்திருந்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ரன்களை விளாசிய 4-வது இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 9000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள்:
சச்சின் டெண்டுல்கர் – 111 போட்டிகள், 179 இன்னிங்ஸ் – 15921 ரன்கள்
ராகுல் டிராவிட் – 104 போட்டிகள், 176 இன்னிங்ஸ் – 13265 ரன்கள்
சுனில் கவாஸ்கர் – 110 போட்டிகள், 192 இன்னிங்ஸ் – 10122 ரன்கள்
விராட் கோலி – 116 போட்டிகள், 197 இன்னிங்ஸ் – 9017 ரன்கள்