உலக செஸ் சாம்பியன்ஷிப் | 2-வது சுற்றை டிரா செய்தார் குகேஷ்!
உலக செஸ் சாம்பியன்ஷிப் இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் 'டிரா' செய்தார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரின் ரெசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோவில் அமைந்துள்ள ஈக்வரியல் ஓட்டலில் நேற்று ( நவ.25ம் தேதி) தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை, இந்திய கிராண்ட் மாஸ்டரான 18 வயதான குகேஷ் எதிர்த்து விளையாடினார்.
14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றார். இந்நிலையில், நேற்று 2வது சுற்றில் இருவரும் மோதினர். இதில் குகேஷ் கருப்பு காய்களுடனும், டிங் லிரென் வெள்ளை காய்களுடனும் விளையாடினார்கள். இந்த ஆட்டம் 23-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.
இதையும் படியுங்கள் : SchoolLeave | கனமழை எதிரொலி… எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
2-வது சுற்று முடிவடைந்த பின்னர் குகேஷ் கூறியதாவது :
" போட்டி இன்னும் நீண்ட தூரம் உள்ளது. நான் நல்ல விளையாட்டை விளையாட முயற்சிப்பேன். உலக சாம்பியன்ஷிப்பில் யார் விளையாடினாலும் அழுத்தம் இருக்கும். நான் வெற்றி பெற்றால் அது ஒரு நல்ல சாதனையாக இருக்கும். ஒரு நேரத்தில் ஒரு சுற்றில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.